பல்கலைக்கழக அனுமதிக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் நாளை முதல் ஆரம்பம்…

2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள் நாளை (14) முதல் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை காலை 6:00 மணி முதல் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

அத்துடன், பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதி 2024 ஜூலை மாதம் 5ஆம் திகதி என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.