மலையக மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக “சதுடு வது” எனும் சந்தோஷமான தோட்ட மண் (Happy Estate) வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தினமும் அதிகரிக்கும் சுகாதார செயல்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்தி 30 வருடங்கள் சீர்திருத்தம் இடம்பெறாத பணிமனையில் ஆரம்பிக்கப்பட்டது.
பெருந்தோட்ட கைத்தொழில் துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் தோட்ட மக்களின் சுகாதார பாதுகாப்பிற்காக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரணவின் ஆலோசனைக்கு இணங்க சுகாதார செயலாளர் கோட்பாட்டின் படி நடைமுறைப்படுத்தப்படும் இவ்வேளை திட்டம் சுகாதார ஊக்குவிப்பு அலுவலகத்தின் முழுமையான முயற்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் போது தோட்ட மக்களின் சுகாதார பிரச்சனைகளை அடையாளம் கண்டு உடல், உள, சமூக , ஆன்மீக முன்னேற்றத்தை ஏற்படுத்தி அவர்களின் அறிவு பண்பாடு திறமைகளை விருத்தி செய்து , ஆரோக்கியமான மக்களாக பல வலுப்படுத்தும் நோக்கில் இவ்வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் “சதுடு வது” நோக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முதற்கட்டமாக இச்செயற்பாடு மேற்கொள்ளப்படுவதுடன், நாடு முழுவதும் உள்ள 460 தோட்டங்களில் 45 தோட்டங்கள் இவ்வேளை திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் ஏழு தோட்டங்கள் கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ளன. அது தவிர நாட்டின் ஐந்து மாகாணங்களில் 11 மாவட்டங்களின் நூற்றுக்கு 5 வீதமானவர்கள் அதாவது மொத்த ஜனத்தொகையில் ஒரு மில்லியன் அளவில் தோட்டப்பகுதி மக்களாகக் காணப்படுகின்றனர்.
இதன்போது கருத்தை தெரிவித்த சுகாதார அமைப்பின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித்த மகைப்பாளர் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்போதைய வேலை திட்டத்தின் கீழ் ஆறு மாத காலங்களுக்குள் அகல தோட்டங்களிலும் காணப்படும் நிலைமைகளில் மாற்றத்தை காணலாம் என்று குறிப்பிட்டார். அடுத்த வருடத்திற்குள் சகல தோட்டங்களிலும் இவ்வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்
தோட்ட சுகாதார ம் இனிய பகுதிகளைப் போன்று வரவேண்டும் என்றும் இம்மு முன்னேற்றம் எம்மால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் சுகாதாரத்துறை மறுசீரமைக்கும் சந்தர்ப்பங்கள் இரண்டு காணப்பட்டதாகவும் இந்த அரசியலமைப்புடன் நாட்டின் சுகாதார சேவையின் முப்பரிமாண பாரிய மாற்றத்தை காணலாம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் 30 வருடங்கள் அளவில் சுகாதார சேவையில் பாரிய மாற்றங்கள் ஏற்படாதிருந்ததாகவும் சுகாதார வெளிபாடு உயர் மட்டத்தில் காணப்படுவதானது மரண வீதம், தொற்ற நோய், புற்றுநோய், வீதி விபத்து , வயது வந்தவர்களின் சனத்தொகை, , அதிகரித்த மன அழுத்தம் போன்றவற்றிற்காக சுகாதார சேவை அவசியமாவது எனக் சுட்டிக்காட்டினார்.
இச் சகாதாரப் புனரமைப்பு வேண்டும் என்பதுடன் சுகாதார துறையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வண்டிய சிறந்த சந்தர்ப்பம் இது என அவர் மேலும் வலியுறுத்தினார்.