தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்
ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழாவில், தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அமித் ஷாவுக்கும் இடையிலான உரையாடல் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலும், பிரதமரின் முதன்மைச் செயலாளராக பி.கே.மிஸ்ராவும் நியமனம்!
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து பிரதமர் மோடி தலைமையில் 18-வது மக்களவை அமைக்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக இரண்டுமுறை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டுவந்த அஜித் தோவலை, மத்திய அரசு மூன்றாவது முறையாக அதே பதவியில் நியமித்திருக்கிறது. அதேபோல், பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக செயல்பட்டுவந்த பி.கே.மிஸ்ராவையும் அதே பதவியில் மத்திய அரசு நியமித்து உத்தரவிட்டிருக்கிறது. மேலும், அமித் கரே மற்றும் தருண் கபூர் ஆகியோர் பிரதமரின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறக்கப்பட்டிருக்கிறது.
குவைத் தீ விபத்து: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்ததாக தகவல்!
குவைத்தில் நடந்த தீ விபத்தில் ராமநாதபுரம் அருகே உள்ள தென்னவனூர் பகுதியை சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்த கருப்பணன் ராமு தீ விபத்து நடந்த கட்டிடத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது உடலை விரைவாக சொந்த ஊருக்கு கொண்டு வர குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, குவைத் தீ விபத்தில் சிக்கிய பேராவூரணி பகுதியை சேர்ந்த இளைஞரான ரிச்சர்ட்டின் நிலை குறித்து தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து நிற்கின்றனர்.
ஜி 7 மாநாடு… இன்று இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி, ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று இத்தாலி செல்கிறார். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக அண்மையில் பிரதமராகப் பதவி ஏற்றபின் செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இத்தாலியில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரையில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஜி7 அமைப்பின் தலைமை பொறுப்பை இத்தாலி வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். ஜி7 அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.