இந்தியா – கனடா போட்டி நடக்காது.. இருந்தாலும் ரோகித் படைக்கு பிரச்சனை இல்லை

டி20 உலக கோப்பை நடைபெற இருக்கும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால், அங்கு சனிக்கிழமை நடைபெறும் டி20 உலகக் கோப்பையின் இறுதி குரூப் ஏ ஆட்டத்தில் இந்தியா – கனடா இடையே மோதிக் கொள்ள உள்ள போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் புளோரிடாவின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒருவேளை இப்போட்டி தடைபட்டால், இந்திய அணி நேரடியாக வெஸ்ட் இண்டீஸ்  புறப்பட்டு செல்ல இருக்கிறது. அங்கு இந்திய அணி விளையாடும் குரூப் 8 சுற்று போட்டிகள் அனைத்தும் நடைபெற இருக்கின்றன. 

இந்தியா – கனடா போட்டி ரத்து செய்யப்படுமா?

இந்தியா மற்றும் கனடா போட்டிக்கு முன்னதாக, புளோரிடா நகரில் மூன்று நாட்களுக்கு கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ பிரிவில் மீதமுள்ள மூன்று போட்டிகள் புளோரிடாவில் நடைபெற உள்ளன. ஜூன் 15-ம் தேதி நடைபெறும் இந்தியா-கனடா போட்டியில் 86% மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இந்தியா ஏற்கனவே சூப்பர்-8க்கு வந்துவிட்டதால், இந்தப் போட்டி ரத்தானாலும் பிரச்னை இல்லை.

இந்திய அணியின் பயிற்சிகள் ரத்து

இந்திய அணி ஜூன் 14ஆம் தேதி லாண்டர்ஹில் மைதானத்தில் பயிற்சி செய்ய இருந்தது. ஆனால், மழை காரணமாக இந்தப் பயிற்சி ரத்து செய்யப்பட்டது. புளோரிடாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், அதிகபட்சம் இந்தப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிளேயிங் லெவனில் மாற்றம்

ஒருவேளை ஏதேனும் வாய்ப்பு இருந்து இந்தியா – கனடா இடையேயான டி20 உலக கோப்பை போட்டி நடைபெற்றால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்கும். இதுவரை விளையாடாத ஜெய்ஷ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் ஒருவர் இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படியான சூழலில் இதுவரை எதிர்பார்த்தளவுக்கு விளையாடாத ஷிவம் துபே நீக்கப்பட வாய்ப்பு  இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.