2024 ஜூன் மாதம் 11 ஆம் திகதி ராகம பொடிவிகும்புர பிரதேசத்தில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர் ஒருவர் (01) நாலாயிரத்து அறுநூறு (4600) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள இலங்கை கடற்படை கப்பல் கட்டும் நிறுவனம், ஸ்ரீ ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து 2024 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் திகதி மேற்கொண்ட இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்று சோதனையிடப்பட்டது அந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யத் தயார்படுத்தப்பட்டிருந்த சுமார் 4600 வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் சந்தேகநபர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதுடைய ராகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் (01) மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.