சென்னை: திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டல் விவகாரம் சர்ச்சையான நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு அரசு விளக்கம். அளித்துள்ளது. திருச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான குத்தகை நிலத்தில் கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ள எஸ்.ஆர்.எம். ஹோட்டலை, திடீரென திமுக அரசு காலி செய்ய திடீர் நடவடிக்கை எடுத்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்த தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், திருச்சி […]