2023/2024 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக நுழைவிற்காக நிகழ்நிலையில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்று (14) தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். நேற்று (13) பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி இன்று காலை 6.00 மணி முதல் www.ugc.ac.lk எனும் இணையத்தளத்தில் பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை 2024 ஜூலை 05 ஆம் திகதி வரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளும் என அதன் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய தலைவர்: விண்ணப்பதாரர்களுக்கு மூன்று வாரங்கள் வரை இதற்காக காலம் வழங்கப்பட்டிருந்ததாகவும், அவதானமாக சிந்தித்து தமது விண்ணப்பங்களை அனுப்புவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் தான் எதிர்பார்க்கும் பல்கலைக்கழகம் அல்லது எதிர்பார்க்கும் பாடநெறி கூடக் கிடைக்காது போவதற்கு வாய்ப்புள்ளது. அதன் படி தமது பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தில் பல்கலைக்கழக ஒழுங்கு மற்றும் தமது பட்டப்படிப்பின் ஒழுங்கில் ஏதேனும் மாற்றம் ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.
அதற்கிணங்க தமது பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்பத்திரத்தில் பல்கலைக்கழக வரிசை மற்றும் தமது பட்டப்பாடநெறியின் ஒழுங்கு என்பவற்றில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வேண்டுமாயின் அதற்கு இரண்டு வார காலங்களுக்குள் பிள்ளைகளுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றார். எனவே விண்ணப்பத்திற்கு மீண்டும் அனுப்பி, மாற்றம் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக இரண்டு வாரங்கள் மேலதிக காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர்,
எந்தவொரு மாணவருக்கும் இணையத்தள வசதி அல்லது கணனி வசதி இல்லாவிடின் அதற்காக விசேட வேலைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மாணவர்களுக்கான கையேடு கையேட்டில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய நிலையங்கள் பல தயார்படுத்தப்பட்டுள்ளன.
பிள்ளைகளுக்கு அவ்வாறான மத்திய நிலையங்களுக்கு சென்று இலவசமாக தமது விண்ணப்ப படிவங்களை கணனி ஊடாக பல்கலைக்கழக உங்கள் மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்ப முடியும் அதற்காக எவ்வித கொடுப்பனவும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இணையதளம் ஊடாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பிரதி எடுத்து அதனை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவிற்கு தபால் மூலம் தயவு செய்து அனுப்புமாறு மாணவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நுழைவின் போது விண்ணப்பதாரர்களுக்கு சாதாரண விதத்தில்
விண்ணப்பிக்க முடியும் என்பதுடன் விசேட நுழைவுக்காக மாணவர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவ்வாறு விசேட நுழைவின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் வழமையான விண்ணப்பிக்கும் முறையிலேயே பல்கலைக்கழக நுழைவிற்காக அனுப்ப முடியும்.
விண்ணப்பிக்கும் போது பிள்ளைகளுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் 24 மணித்தியாலத்திமும் 1919 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தமது சிக்கல்களுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.
யாரேனும் மாணவருக்கு அதன்போது திருப்தி அடையாவிட்டால் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தகவல் நிலையத்திற்கு அழைத்து தேவையான தகவலைப் பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.
அதற்காக 011 2695301/ 011 2695302 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு தமது சிக்கல்களை முன்வைத்து அதன் போது தமக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.
தமது வாழ்க்கையில் முக்கியமான பல்கலைக்கழக நுழைவின் போது எவ்வித தவறுகளும் இன்றி இந்த விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பதற்கு பிள்ளைகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
அதுபோல் யூடியூப் ஊடாக மற்றும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் மும்மொழியிலான வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
உங்களின் மாணவர் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இந்த யூடியூப் வீடியோ ஊடாக முன் மொழியிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
உங்களுக்கு மேலும் வசதி அளிப்பதற்காக உங்களின் விண்ணப்பப் படிவம் மிகவும் இலகுவாக புரிந்து கொள்ள கூடிய விதத்தில், வாசிப்பதற்கு மேலதிகமாக அது தொடர்பான வீடியோ ஒளிப்பதிவு ஊடாக பிரச்சனைளுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் தகவல் மத்திய நிலையத்திற்கு வருவதற்கு முன்னர் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்படுமாயின் இந்த வீடியோவைப் பார்த்து தெளிவடையுமாறு மாணவர்களை ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டார்.
உண்மையாகவே கொரோனா தொற்றுக் காலத்தில் உயர்கல்வித்துறை யில் பிள்ளைகளுக்கு வரப்பிரசாதமாக இன்றைய இணையக் கல்வி ஊடாக இந்த வேலை நிறுத்தம் காணப்படும் சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை பல்கலைக்கழக பொறிமுறையில் முடிந்தவரை உயர்தரத்தில் மேற்கொள்கின்றமை, அது தவிர இந்த புத்தகம் அச்சிடப்பட்டு தமது வீட்டுக்கு அருகில் புத்தகக் கடையில் வழங்க முடியாமைக்கு, வீட்டின் உள்ளே இருந்து கொண்டு பார்ப்பதற்கு பிள்ளைகளுக்கு அதற்கான வசதிகளை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்புவதற்கும் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பிள்ளைகளுக்கு அப்பிரச்சினைகளை அவ்வாறே விடாது, தற்போது காணப்படும் வேலை நிறுத்தத்துடன் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அதற்கு அப்பால் சென்று வெளி நிறுவனங்களுடன் இணைந்து இது தொடர்பாக செயல்படுகின்றது.
பிள்ளைகளுக்கு போதிய வசதிகள் இதனூடாக வழங்கப்பட்டுள்ளன. எமது பரம்பரைக்கு கிடைத்ததை விட தற்போதைய பிள்ளைகளுக்கு இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உதவி அளிக்க முடிந்துள்ளது. தற்போது பிள்ளைகள் கணினி ஊடாகவே படிக்கின்றார்கள். அது எவ்வாறு என்றால் ஆகக் குறைந்தது தொலைபேசி ஊடாகவாவது அவர்கள் விரிவுரைகளில் கலந்து கொள்கின்றார்கள்.
இது தமது தொலைபேசி ஊடாகவாவது இந்த விண்ணப்பத்தை அனுப்பக் கூடியதாகவும் வசதி அளிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெளிவு படுத்தியமை குறிப்பிடத்தக்கது