உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் ஒன்றான ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் 2040 ஆம் ஆண்டுக்குள் ICE வாகனங்களை முழுமையாக நீக்குவதற்கான திட்டத்தை செயல்படுத்த துவங்கி உள்ளது.
பரவலாக பல்வேறு நாடுகளும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ள நிலையில் ICE பெற்ற வாகனங்கள் பரவலாக விடைபெற தொடங்கி விட்டன இந்த நிலையில் தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து மாடல்களையும் மின்சார வாகனங்களாக மாற்றுவதற்கு 2040 ஆம் ஆண்டுக்குள் இலக்கினை இந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
முதற்கட்டமாக 2025 ஆம் ஆண்டிற்குள் 10 எலக்ட்ரிக் வாகனங்களை மோட்டார் சைக்கிள் உட்பட விற்பனைக்கு கொண்டு வர இந்நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. படிப்படியாக இந்த எண்ணிக்கை விரிவுபடுத்த உள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 10 லட்சம் வாகனங்களை விற்பனை செய்யவும் திட்டமிட்டு இருக்கின்றது இதனை 2030 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 35 லட்சம் வாகனங்களாகவும் இது தனது ஒட்டுமொத்த விற்பனையில் 15 சதவீதமாக இருக்கும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஹோண்டா நிறுவனத்திற்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக விளங்கி வருகின்ற நிலையில் குறிப்பாக ஸ்கூட்டர் சந்தையில் இந்நிறுவனம் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கி வருகின்றது. எனவே, இந்திய சந்தைக்கான பிரத்தியேகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்தாண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியிட வாய்ப்பு உள்ளது இந்த மாடல் அனேகமாக பேட்டரி ஸ்வாப்பிங் தொழில்நுட்பத்துடன் கூடியதாகவும் மேலும் ஃபிக்சட் பாக்டரி கொண்டதாகவும் இரண்டு விதமான ஆப்ஷனை பெற்ற ஹோண்டா எலக்ட்ரிக் ஆக்டிவா மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.