Airtel vs Jio: பட்ஜெட் விலை நல்ல ரீசார்ஜ் திட்டம் வேண்டுமா…? பெஸ்ட் பிளான்கள் இதோ!

Airtel vs Jio Recharge Plans: முன்பெல்லாம் மொபைல் ரீசார்ஜ் செய்வது என்பது காலிங் வசதிக்காகதான் இருக்கும். லோக்கல் கால், எஸ்டிடீ கால், ஐஎஸ்டீ கால் என உள்ளூர், வெளியூர், வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு காலிங் வசதிகளுக்கு ஏற்ப கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன. காலிங் ஒருபுறம் என்றால் மெசேஜ்களை அனுப்ப தனி பிளான் போட வேண்டும். அந்த காலத்தில் காதல் பறவைகள் அனைவரும் பூஸ்டர் பேக் போடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததை பார்க்க முடியும்.  

ஆனால் தற்போதைய சூழலில் காலிங் வரம்பற்ற வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 100 மெசேஜ்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் டேட்டாவுக்கு மட்டும்தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிலும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி இணைய சேவையை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வரம்பற்ற வகையில் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், பார்த்தோமானால் டேட்டா மட்டுமே வாடிக்கையாளர்களிடம் அதிகபட்ச தேவையாக இருக்கிறது. 

எனினும், வாடிக்கையாளர்கள் பட்ஜெட் விலையில் ரீசார்ஜ் செய்யும் போது டேட்டா பலன்களுடன் சில கூடுதல் பலன்களையும் எதிர்பார்ப்பார்ப்பார்கள். இப்போது தொலைத்தொடர்பு துறையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்ற என்ற நிலையில் அந்நிறுவனங்கள் 400 ரூபாய் ரேஞ்சில் வழங்கும் திட்டங்கள் குறித்த ஒப்பீட்டை இங்கு காணலாம். அதாவது, 400 ரூபாய் திட்டம் என்பது வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட் விலையில் கிடைக்கும் திட்டமாகும். எனவே, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 400 ரூபாய்க்கு வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டி, டேட்டா பலன்கள் மற்றும் கூடுதல் பலன்கள் ஆகியவை குறித்து இங்கு காணலாம்.

ஏர்டெல் திட்டங்கள்

ரூ.395 ரீசார்ஜ் பிளான்: இந்த பிளானின் வேலிடிட்டி 70 நாள்கள் ஆகும். இதில் மொத்தமாக 6ஜிபி டேட்டா பலன்கள் கிடைக்கும். வரம்பற்ற காலிங் வசதியும் இருக்கும். Wync Music மற்றும் Hello Tune ஆகியவை கிடைக்கும். 

ரூ.399 ரீசார்ஜ் பிளான்: இதன் வேலிடிட்டி 28 நாள்கள் ஆகும். இதில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற காலிங் வசதி உள்ளது. மேலும் Airtel Extreme Play சந்தா கிடைக்கும், அதில் 20க்கும் மேற்பட்ட ஓடிடி கிடைக்கும். Hello Tune மற்றும் Wync Music சந்தா கிடைக்கும்.

ரூ.359 ரீசார்ஜ் பிளான்: இதன் வேலிடிட்டி 1 மாதமாகும். இதில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். இதிலும் வரம்பற்ற காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். Hello Tune, Wync Music, Airtel Extreme ஆகியவை இலவசமாக கிடைக்கும். 

ஜியோ ப்ரீபெய்ட் பிளான்கள்

ரூ.349 ரீசார்ஜ் பிளான்: இதன் வேலிடிட்டி 30 நாள்களாகும். தினமும் 2.5 டேட்டா கிடைக்கும். வரம்பற்ற காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும். Jio TV, Jio Cinema, Jio Cloud ஆகியவையும் இலவசமாக கிடைக்கும். 

ரூ.388 ரீசார்ஜ் பிளான்: இதன் வேலிடிட்டி 28 நாள்களாகும். இதில் 2ஜிபி டேட்டா தினமும் கிடைக்கும். வரம்பற்ற காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். அதுமட்டுமின்றி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் சந்தா 28 நாள்களுக்கு கிடைக்கும். JioTV, JioCinema, JioCloud ஆகியவை இலவசமாக கிடைக்கும். 

ரூ.398 ரீசார்ஜ் பிளான்: இதன் வேலிடிட்டி 28 நாள்களாகும். இதில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். வரம்பற்ற காலிங் வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். 12க்கும் மேற்பட்ட ஓடிடிகள் இதில் கிடைக்கும். அதில் SonyLiv மற்றும் Zee5 ஓடிடிகளும் அடங்கும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.