Kuwait Fire: இறந்தவர்களில் கேரளாவைச் சேர்ந்தவர்களே அதிகம் – IAF விமானத்தில் கொச்சி வரும் உடல்கள்

குவைத் நாட்டில் இந்தியர்கள் அதிகமாக வசித்துவந்த அடுக்கு மாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 49 பேர் இறந்துள்ளனர். மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 45 பேர் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. அதில் 23 பேர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவந்து உள்ளது. மேலும், எரிந்த நிலையில் உருக்குலைந்த பலரது உடல்களை அடையாளம் காணும் முயற்சி நடந்துவருகிறது. இதற்கிடையே கேரளாவை சேர்ந்தவர்களின் மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. கேரளாவில் 23 பேர் மரணமடைந்திருப்பதை அடுத்து அம்மாநில அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

விபத்தில் கேரளாவைச் சேர்ந்தவர்களின் உடல்களை சொந்த ஊர் கொண்டுவருவதற்கும், காயம் அடைந்து சிகிச்சைபெற்று வருபவர்களுக்கு உதவும் வகையிலும் கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று இரவு குவைத் புறப்பட்டுச் சென்றுள்ளார். குவைத் செல்லும் முன்பு திருவனந்தபுரம் விமானநிலையத்தில் அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 23 பேர் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இரண்டு உடல்கள் கேரளாவை சேர்ந்ததாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றன. இறந்தவர்களின் உடல்களை ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நடந்துவருகின்றன. அந்த விபத்தில் அதிகமானோர் இறந்தது கேரளாவில்தான். எனவே கொச்சி விமான நிலையத்துக்கு உடல்களை கொண்டுவரவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

கேரள மாநிலத்தில் இருந்து வெளிநாட்டில் வேலைசெய்யும் நம் சகோதரர்களுக்கு ஏற்பட்டுள்ள மிகவும் துக்ககரமான சம்பவம் இது. அந்த விபத்தில் சிக்கிய கேரளாவைச் சேர்ந்த 4 பேர் ஐ.சி.யு-வில் சிகிச்சையில் உள்ளனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து மருத்துமனையில் உள்ளனர்” என்றார்.

குவைத்தில் இறந்த இந்தியர்களின் உடல்களை பாக்ஸ்களில் வைக்கும் பணிகள் நேற்று இரவு நடைபெற்ற நிலையில், அந்த உடல்கள் இந்தியா கொண்டுவருவதற்காக விமானப் படைக்கு சொந்தமான விமானம் பயன்படுத்தப்படுகிறது. இன்று காலை 8.30 மணி அளவில் உடல்கள் கொச்சின் கொண்டு வரப்படும். கொச்சின் விமான நிலையத்தில் உடல்களை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.