கேரளாவில் முதல் முறையாக வெற்றிபெற்றுள்ள பாஜக தங்களது வெற்றியை கதகளி ஆடி கொண்டாடிவருகின்றனர். இந்த நிலையில், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஈ.கே. நாயனார் எனது அரசியல் குரு என்று வலதுசாரி பாஜக கட்சி எம்.பி. சுரேஷ் கோபி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அக்கட்சியின் வேட்பாளர் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தனது பதவியேற்பை தொடர்ந்து கேரளா திரும்பிய சுரேஷ் கோபி இறுதினங்களுக்கு முன்பு கண்ணூரில் உள்ள […]