இந்தியாவின் மிகப்பெரிய பொது பங்கு வெளியிடும் திடத்திற்கான DRHP ஆவனங்களை சமர்பித்துள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ஐபிஓ மூலம் ரூ.25,00 கோடியை ($ 3 பில்லியன்) ஆஃபர் ஃபார் சேல் முறையில் திரட்ட இந்தியப்பிரிவின் சுமார் 17.5 % பங்குகளை வெளியிட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மிகப்பெரிய எல்.ஐ.சி பொது பங்கு வெளியிட்டை விட கூடுதல் மதிப்பில் இந்திய வரலாற்றில் சுமார் ரூ.25,000 கோடியை திரட்டும் முதல் நிறுவனமாக விளங்க உள்ள ஹூண்டாய் இந்தியா தனது மதிப்பினை ரூ.1.50 லட்சம் கோடியாக அல்லது $18 பில்லியன் ஆக குறிப்பிட்டுள்ளது.
மாருதி சுசுகி இந்தியா 2003ல் பட்டியலிடப்பட்டதிலிருந்து இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக எந்தவொரு இந்திய கார் தயாரிப்பாளரும் வெளிடாத நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகின்ற முதல் IPO இதுவாகும்.
ஹூண்டாய் மோட்டார் கோ அதன் மொத்த 81,25,41,100 (812.54 மில்லியன்) ஈக்விட்டி பங்குகளில் 14,21,94,700 (142.19 மில்லியன்) ரூ.10 முக மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்யும் என்று SEBIல் தாக்கல் செய்த DRHP மூலம் தெரிய வந்துள்ளது.
வெளியிடப்படும் பங்குகளில் 50 % வரை தகுதிவாய்ந்த நிறுவன வாங்குபவர்களுக்கு (Qualified Institutional Buyers) வழங்கப்படும், அதே சமயம் 15% நிறுவனம் அல்லாத வாங்குபவர்களுக்கு ஒதுக்கப்படும் (non-institutional buyers), மற்றும் சில்லறை வாங்குபவர்களுக்கு (retail buyers) 35% வரை ஒதுக்கப்படும். ஹூண்டாயின் தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் பாம்பே பங்குச் சந்தை (BSE) ஆகிய என இரண்டிலும் பட்டியலிடப்படும்.
ஹூண்டாய் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளராக விளங்குகின்ற தென்கொரியாவை தலைமையிடமாக கொண்ட ஹூண்டாய் மோட்டார் குழுமம் 1996 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் சான்ட்ரோ கார் மூலம் நுழைந்தது.
தற்பொழுது ஹூண்டாய் கிரெட்டா, கிராண்ட் ஐ10, ஐ20 உள்ளிட்ட மாடல்களுடன் வெனியூ, எக்ஸ்டர் போன்றவற்றுடன் அல்கசார், ஐயோனிக் 5 ஆகிய மாடல்கள் அதிக வரவேற்பினை பெற்றதாக விளங்குகின்றது. மேலும் வரும் காலத்தில் ஹூண்டாய் கிரெட்டா இவி உட்பட பல்வேறு எலக்ட்ரிக் மாடல்கள் மற்றும் ஹைபிரிட் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றது.