கண்டி மாவட்டம் ஹேவாஹெட்ட பிரதேச சபைக்குற்பட்ட பட்டகல கிராம மக்களுக்கு குடி நீர் திட்டத்தை நீர் வழங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று (14.06.2024) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இக்குடி நீர் திட்டத்தை 8.4 மில்லியன் ரூபாய் செலவில் 84 குடும்பங்களை சேர்ந்த பயனாளர்கள் பயன்பெறக்கூடிய வகையில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜெயரத்னவுடன் இனைந்து ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் கருத்து தெரிவிக்கும்போது…
நாட்டில் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தலில் ஓடி போனவர்களுக்கு வாக்களிக்காத நின்று சாதித்தவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இன்று நாட்டு மக்களுக்கு அஸ்வெசும நலன் புரி திட்டத்தை ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க கொண்டு வந்துள்ளார். அதேபோல நாட்டில் 20 லட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு உரிமை காணிபத்திரம் ஜனாதிபதியின் வேலைத்திட்டம் ஊடாக வழங்கப்பட்டுள்ளது .
இந்த நாட்டி முதுகெலும்பாக திகழும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் கொரோனா காலத்திலும் சரி,அரசியல் நெருக்கடி காலத்திலும் சரி,பின் பொருளாதார நெருக்கடி காலத்திலும் சரி தேயிலை கொய்து கொண்டே இருந்த இம் மக்களுக்கு இன்று 1700/= ரூபாய் நாள் சம்பளம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இன்று பலமும் கூட பெருந்தோட்ட கம்பனிகளின் கைகளில் இருந்து சாதாரண தொழிலாளர் கைகளுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 200 வருடகால வாழ்வியல் சரித்திரம் கொண்ட மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அவர்கள் வாழும் இடத்தில் காணி உரிமை வழங்கப்படவுள்ளது என தெரிவித்த அமைச்சர் ஐ.எம்.எப் (IMF) தொடர்பில் எந்த எதிர் கட்சிகளாக இருந்தாலும் சரி அவர்கள் முடியாது,கிடைக்காது,வேண்டாம் இந்த மூன்று வார்த்தைகளை பாவித்து வந்தனர்.
ஆனால் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க இவ்விடயத்தில் சாதித்து காட்டி நாட்டை கட்டியெழுபியுள்ளார்.
இறுதியாக ஒன்றை தெரிவித்து கொள்கிறேன் ஒரு தேர்தல் வரும் போது மக்களுடைய பலம் என்னவென்று ஒவ்வொறுவருக்கும் தெரிந்தாக வேண்டும்.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலை பலர் அவரவர் இமேஜை பொருத்து சித்தரிக்கப்பார்கின்றனர்.
இந்த நிலையில் முதலில் நாம் மக்களுக்கு என்ன செய்துள்ளோம் என்பதை உணர வேண்டும்.
அதேநேரத்தில் வாக்காளர் மக்களுக்கு மறதி ஒரு பிரச்சினையாக காணப்படுகிறது.
ஆனால் மக்கள் எதுக்கெள்ளாம் வரிசையில் நின்றனர் எதை மறந்துவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஆகையால் வரப்போகும் தேர்தலில் ஓடிப்போனவர்களுக்கு வாக்களிக்காது நின்று சாதித்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கருத்துரைத்தார்.