சென்னை: சியோமி 14 CiVi (சினிமேட்டிக் விஷன்) ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அண்மையில் அறிமுகமானது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
கடந்த 2014 வாக்கில் இந்திய சந்தையில் நுழைந்தது சீன நிறுவனமான சியோமி. பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மிகவும் பிரபலம்.
படிப்படியாக பல்வேறு டிஜிட்டல் சாதனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்யத் தொடங்கியது. தற்போது சியோமி 14 CiVi ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இது சியோமி 14 சீரிஸ் வரிசைகளில் ஒன்றாக வெளிவந்துள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.55 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8s ஜெனரேஷன் 3 சிப்செட்
- 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம்
- 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ்
- 32 + 32 மெகாபிக்சல் என இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 50 + 12 + 50 மெகாபிக்சல் என மூன்று கேமராக்களை கொண்டுள்ளது பின்பக்க கேமரா
- 4,700mAh பேட்டரி
- 67 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் போனுடன் வழங்கப்படுகிறது
- டைப் – சி யுஎஸ்பி
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- இந்த போனின் விலை ரூ.42,999 முதல் தொடங்குகிறது
- வரும் 20-ம் தேதி முதல் சந்தையில் விற்பனை தொடங்குகிறது