சென்னை: அஜித்தின் ரெட் மற்றும் சூர்யாவை வைத்து மாயாவி படங்களை இயக்கியதே சிங்கம்புலி தான் என்றால் பலரும் ஷாக் ஆகத்தான் செய்வார்கள். காமெடி நடிகராக பாயாசம் இன்னும் வரல என வசனம் பேசிய சிங்கம்புலியை தான் பலருக்கும் தெரியும். பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி, சில படங்களை இயக்கிய சிங்கம்புலி மகாராஜா படத்தில் நடிகராக மிரட்டியுள்ளார்.