விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க வேட்பாளர் சி.அன்புமணி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க சார்பில் வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பாமக சார்பில் மருத்துவர் ராமதாஸ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஜூலை 10-ஆம் நாள் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி அவர்கள் போட்டியிடுவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்: 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை!
கடந்த 2015 முதல் 2017-ம் ஆண்டு வரை சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்படி உழவர்களுக்கு வழங்கப்பட்ட விபத்து இழப்பீடு, இயற்கை மரணம், திருமண உதவி தொகை, கல்வி உதவி தொகை போன்ற திட்டங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு மற்றும் கையாடல் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரி கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் விரிவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.
அப்போதைய சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுந்தரராஜன், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டராக பணிபுரிந்த தேவிகா மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட தாதம்பாளையத்தை சேர்ந்த முருகன் ஆகியோர்கள் மீது விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில், 8 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். விழுப்புரம் அரசு ஊழியர் நகர் மற்றும் மந்தக்கரை கீழ செட்டி தெருவில் உள்ள வட்டாட்சியர் சுந்தரராஜன் வீடுகள், செல்வராஜ் நகரில் உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் தேவிகா வீடு மற்றும் வளவனூர் தாதம்பாளையத்தில் உள்ள இடைத்தரகர் முருகன் ஆகியோரது வீடுகளில் கடலூர் மற்றும் விழுப்பரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் 4 குழுக்களாக இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88