சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக தமிழக காவல்துறை சார்பில் தேசியஅளவில் பெண் காவலர்களுக்கான சிறப்பு துப்பாக்கி சுடுதல் போட்டிகள், ஜூன் 15 தொடங்கி ஜூன் 20-ம் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம் ஒட்டிவாக்கத்தில் உள்ளதமிழ்நாடு கமாண்டோ பயிற்சிபள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. 13 பிரிவுகளில் நடத்தப்படும் போட்டிகளில், தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 454 பெண் போலீஸார் பங்கேற்றுள்ளனர்.
போட்டிக்கான தொடக்க விழாசென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், வெள்ளை நிற பலூன்களையும், வெள்ளை புறாக்களையும் பறக்கவிட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
விழாவில், பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபி பாலநாகதேவி, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ஆவடி காவல் ஆணையர் சங்கர், அகில இந்திய காவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாடு வாரிய பார்வையாளர்கள் ஆர்.கே.மிஸ்ரா, மோனிகா யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.