பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தான் மாநிலம், அனுப்கர் மாவட்டத்துக்கு ட்ரோன்கள் மூலம் கடத்திக்கொண்டு வரப்பட்ட, ரூ.60 கோடி மதிப்புள்ள 12 கிலோ ஹெராயின் போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இரண்டு வெவ்வேறு இடங்களில் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையானது அனுப்பர், சமேஜா கோதி ஆகிய இரண்டு தனித்தனி பகுதிகளில் நடைபெற்றது.
முதல் சம்பவத்தைப் பொறுத்தவரையில், கைலாஷ் போஸ்ட் அருகே 13 K என்ற கிராமத்தில் ஆளில்லா ட்ரோன் விமான சத்தம் கேட்டதும் பி.எஸ்.எஃப் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி, போலீஸாருடன் இணைந்து நடத்திய சோதனையில், ரூ.30 கோடி மதிப்புள்ள 6 கிலோ ஹெராயின் கொண்ட 2 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல், இரண்டாவது சம்பவத்தில், சமேஜா கோதி காவல் நிலைய பகுதியில் ட்ரோன் சத்தம் கேட்டுள்ளது. ட்ரோன் சத்தம் கேட்ட உள்ளூர்வாசிகள் போலீஸாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர் . தகவல் கொடுத்த பிறகு சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், கடத்தல்காரர்கள் போதைப்பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த இடத்துக்கு கிராமவாசிகளுடன் சென்றனர்.
இடத்தை நெருங்கும்போது கடத்தல்காரர்களுக்கும் , போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர். இருப்பினும், அப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 கோடி மதிப்புள்ள 6 கிலோ ஹெராயின் அடங்கிய 2 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தமாக நேற்று மட்டுமே பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தானுக்கு ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம் கடத்திக் கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.60 கோடி மதிப்புள்ள 12 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது போன்ற போதைப்பொருள் கடத்தல் அடிக்கடி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இதனை அனுப்கர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் மோரியா ஒப்புக்கொண்டார். இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் ட்ரோன்களைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்ய எல்லைப் பகுதியில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை நிறுவும் திட்டங்களை மேற்கொள்ளப் போவதாகக் கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb