ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஷுப்மான் கில்! இதுதான் உண்மையான காரணமா?

Shubman Gill News: புளோரிடாவில் ஏற்பட்ட கடுமையான வானிலை மற்றும் மழை காரணமாக இந்தியா மற்றும் கனடா அணிகள் விளையாட இருந்த டி20 உலக கோப்பை போட்டி டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது. போட்டி ஆரம்பிக்கும் முன்பு மழை நின்று இருந்தாலும் மோசமான அவுட்ஃபீல்ட் காரணமாக கைவிடப்பட்டது. இந்த போட்டியுடன் இந்தியாவின் சூப்பர் 8 சுற்று முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான், அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளை தோற்கடித்து குரூப் ஏவில் தோல்வி அடையாத அணியாக சூப்பர் 8க்கு முன்னேறி உள்ளது. மூன்று போட்டிகளில் ஏழு புள்ளிகளுடன் குரூப் ஏ டேபிள் டாப்பர்களாக இந்தியா உள்ளது. இந்திய அணி லீக் ஆட்டங்களில் நியூயார்க் மைதானத்தில் மட்டுமே விளையாடினர்.

தற்போது அடுத்த சுற்றுக்கு கரீபியன் தீவுகளுக்குச் செல்ல உள்ளனர். இந்நிலையில் இந்திய அணியுடன் கூடுதல் வீரர்களாக இருந்த சுப்மான் கில் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் அணியில் இருந்து தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இருவரும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னதாக இந்தியா திரும்ப உள்ளனர். ஆனாலும் ரின்கு சிங் மற்றும் கலீல் அகமது ஆகியோர் இந்திய அணியுடன் கரீபியனுக்கு செல்ல உள்ளனர். இந்த செய்தி வெளியானதில் இருந்து “ஒழுங்கு பிரச்சினை” காரணமாக தான் கில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், இவை அனைத்தும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை என்றும், வதந்திகளை பரப்பவேண்டாம் என்றும் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Shubman Gill ended all the rumours in savage Gilly’s discipline style #shubmangill#rohitsharma pic.twitter.com/EOPY5Zbgad

— Ma June 16, 2024

இரண்டு ரிசர்வ் வீரர்கள் மட்டுமே சூப்பர் 8 சுற்றின் போது அணியுடன் இணைவார்கள் என்பதை உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பே நிர்வாகம் முடிவு செய்தது என்பதை பேட்டிங் பயிற்சியாளர் ரத்தோர் தெளிவுபடுத்தி உள்ளார். “இது ஆரம்பத்திலிருந்தே எங்களின் திட்டமாக இருந்தது. நாங்கள் அமெரிக்காவுக்கு வரும்போது நான்கு ரிசர்வ் வீரர்கள் எங்களுடன் வருவார்கள். அதன் பிறகு இரண்டு பேர் நாடு திரும்புவார்கள். இரண்டு பேர் அணியுடன் தொடர்ந்து பயணிப்பார்கள். இந்த திட்டம் ஆரம்பத்திலேயே எடுக்கப்பட்டது. எனவே நாங்கள் அதைப் பின்பற்றுகிறோம்” என்று ரத்தோர் கூறினார்.

மேலும் பேசிய அவர், “இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் ரிசர்வ் வீரர்களாக இருப்பது கவலை அளிக்கிறது. இருப்பினும் அணியின் வெற்றிக்காக இந்த முடிவு எடுக்கப்படுகிறது. ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட வேடனும். கனடா அணியுடனான போட்டி மழையால் ரத்தானது கவலை அளிக்கிறது. அமெரிக்கா போன்ற மைதானங்களில் விளையாடும் போது ஏதேனும் காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சூப்பர் 8ல் அது போன்று எதுவும் நடக்க கூடாது என்று நினைக்கிறோம்” என்று கூறினார். வரும் ஜூன் 20ம் தேதி வியாழக்கிழமை பார்படாஸில் நடைபெறும் சூப்பர் 8 போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.