கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் சபரிநாதன். ஆடிட்டரான இவரின் செல்போனுக்கு கடந்த 11.04.2024 ஆம் தேதி மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில், முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அதில் கொடுத்திருந்த செல்போன் நம்பரை சபரிநாதன் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர்கள் கொடுத்த லிங்கில் தனது விவரங்களை சபரிநாதன் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து அவர்கள் கொடுத்த நான்கு வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளாக மொத்தம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் அவர்கள் கூறியபடி எந்தவித லாபமும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சிக்குள்ளான சபரிநாதன் அந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் ஆக இருந்துள்ளது.
மேலும் அவர்கள் கொடுத்திருந்த லிங்கும் இப்போது வேலைசெய்யவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சபரிநாதன் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார். போலீஸார் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88