சேலம், அம்மாபேட்டை உடையாபட்டி பைபாஸ் அருகில் தனியார் ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஃபைனான்ஸ் மூலம் வழங்கப்பட்ட தொகையை ரூ.12 லட்சத்தை வசூலித்த ஊழியர்களான யுவராஜ், குமார் ஆகியோர் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்வதற்காக கொண்டு சென்றனர். நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி அளவில் தனியார் ஸ்பின்னிங் மில் அருகே சென்றபோது இரண்டு டூவீலரில் வந்த 4 பேர் கத்தி முனையில் விரட்டி 12 லட்சத்தை பறித்துச் சென்றனர்.
இது தொடர்பாக அம்மாபேட்டை போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இருக்கிறதா என போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், குறிப்பிட்ட அந்த பகுதியில் மட்டும் சிசிடிவி கேமரா இல்லை. இதனை நன்கு நோட்டுமிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் கொள்ளையர்கள் தப்பி சென்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்கள் அடையாளம் தெரியாமல் இருக்கும் வகையில், ஹெல்மெட் அணிந்துள்ள காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் இந்த சம்பவத்தில் ஃபைனான்ஸ் ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த கொள்ளையில் திருச்சியை சேர்ந்த கும்பல் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88