Tata Nexon 7 Years Anniversary Celebration: டாடா நிறுவனம் அதன் கார் விற்பனையில் கடந்த மே மாதத்தில் சற்றே ஏற்ற இறக்கத்தை கண்டுள்ளது எனலாம். கடந்தாண்டு மே மாதத்தை ஒப்பிடும்போதும், இந்தாண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போதும் டாடா நிறுவனத்தின் பயணிகள் கார் விற்பனை வீழ்ச்சியை கண்டுள்ளது எனலாம்.
Tata Punch மட்டுமே இந்த மே மாதத்தில் நல்ல விற்பனையை அடைந்துள்ளது. Tata Punch மற்றும் Punch.ev இரண்டும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரத்து 949 கார்கள் விற்பனையாகி உள்ளது. மொத்தமே டாடா நிறுவத்தில் 46 ஆயிரத்து 700 கார்களே மே மாதத்தில் விற்பனையான நிலையில், இதில் Tata Punch காரின் விற்பனை சதவீதம் மட்டும் 40.58% ஆகும்.
ஏற்ற இறக்கத்தில் விற்பனை
மறுபுறம், Tata Nexon கடந்தாண்டை விட 20.56% விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. Tata Nexon மட்டுமின்றி, Altroz, Tigor, Safari, Harrier போன்ற கார்களும் இந்த மே மாதம் கடந்தாண்டை விட குறைவாகவே விற்பனை ஆகியுள்ளன. இவை அனைத்தையும் வருடாந்திர விற்பனை ஒப்பீடுதான். மாதாந்திர விற்பனை ஒப்பீட்டில், அதாவது 2024 ஏப்ரல் மற்றும் 2024 மே மாத விற்பனையை பார்க்கும் போது, இந்த மே மாதம் 2.47% விற்பனை குறைந்திருக்கிறது. அதிலும் Tata Punch கார் உள்பட அனைத்து கார்களும், ஏப்ரலை விட குறைவாகவே விற்பனையாகி உள்ளது.
ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் Tata Nexon விற்பனை மட்டும் 2.59% உயர்ந்துள்ளது. இதில் அதன் EV மாடலும் அடங்கும். விற்பனையில் இந்த ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் டாடா கார் அதன் பாதுகாப்பு பரிசோதனையில் மிகச்சிறப்பாக செயலாற்றி உள்ளது. டாடா நிறுவனத்தின் SUV கார்களான Punch.ev, Nexon.ev, Safari, Harrier கார்கள் பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றன.
பாதுகாப்பிலும் கெத்து…
அதுவும், இந்தியாவில் முதல்முதலாக பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெறும் EV கார்கள் என்ற சாதனையை Punch.ev மற்றும் Nexon.ev ஆகிய மாடல்கள் பெற்றுள்ளன. இது பல டாடா வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியாகும். அதுமட்டுமின்றி, பல்வேறு வாடிக்கையாளர்களையும் டாடா EV நோக்கி ஈர்க்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. அந்த வகையில் டாடா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கொண்டாட்டச் செய்தியையும் தற்போது அறிவித்துள்ளது.
Tata Nexon கொண்டாட்டம்
Tata Nexon கார் அறிமுகமாகி 7 வருடங்களில் 7 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளதை கொண்டாடும் வகையில் ஒரு முன்னெடுப்பை டாடா நிறுவனம் எடுத்துள்ளது. இந்த Tata Nexon கார் 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வந்த SUV கார் Tata Nexon தான்.
2018இல் முதல்முறையாக இந்திய தயாரிப்பு கார் ஒன்று பாதுகாப்பு பரிசோதனையில் Global NCAP என்பதன் கீழ் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது என்றால் அது டாடா Nexon கார்தான். அதேபோல், சமீபத்தில் Nexon.EV காரும் பாதுகாப்பு அம்சத்தில் Bharat NCAP என்பதன் கீழ் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. பாதுகாப்பு அம்சத்தில் எவ்வித சமரசமும் இல்லாத காரணத்தால் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி
உதாரணமாக இந்த கார் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேல் விற்றுள்ளது. இதில் பெட்ரோல், டீசல், EV என மூன்று தயாரிப்புகளும் உள்ளன. 2017ஆம் ஆண்டு தொடங்கிய இதன் விற்பனையில் 2019 ஆகஸ்ட் மாதம்தான் ஒரு லட்சம் யூனிட்கள் விற்றன. ஆனால் 2021ஆம் ஆண்டுக்கு பின் அசூர வளர்ச்சியை பெற்ற இதன் விற்பனை கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் 6 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி அசரவைத்தது. தொடர்ந்து, தற்போது 7ஆம் ஆண்டில் 7 லட்சம் யூனிட்கள் நோக்கிய பயணத்தை Tata Nexon கொண்டுள்ளது.
வரும் ஜூலையில் 7 லட்சம் யூனிட்கள் தாண்டும் என்ற நிலையில், நாடு முழுவதும் உள்ள டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனத்தின் டீலர் மற்றும் ஷோரூம்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் சந்திப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இந்த சிறப்பான தருணத்தை கொண்டாடும் வகையில் டாடா நிறுவனம் Nexon காருக்கு 1 லட்சம் வரை பரிசு பொருள்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மாடல் மற்றும் வேரியண்டை பொருத்தது. இது புதிய கார்கள்
மேலும் படிக்க | மே மாதத்தில் விற்பனையில் கலக்கிய டாப் 8 கார்கள்… எது முதலிடம் தெரியுமா?