2024 பஜாஜ் பல்சர் 150-ல் உள்ள முக்கிய சிறப்புகள் மற்றும் ஆன்ரோடு விலை

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 150 பைக்கின் பல்வேறு சிறப்பம்சங்களை இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம் இந்தியாவின் மிகவும் பிரபலமான ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற பல்சர் பைக்கில் தற்பொழுதும் கிளாசிக் ஸ்டைலை தக்க வைத்துக் கொண்டிருக்கிற மாடல்களில் ஒன்றாக விளங்குகின்றது.

பல்சர் 150 மாடலுக்கு நேரடியாக போட்டியை ஏற்படுத்தும் வகையில் 150 சிசி சந்தையில் கிடைக்கின்ற யமஹா FZ-S சீரியஸ் பைக்குகள், ஹோண்டா யூனிகார்ன் 160, இது தவிர 160சிசி சந்தையில் இருக்கின்ற சில மாடல்களும் இந்த பைக்கிற்கு போட்டியாக அமைந்திருக்கின்றன குறிப்பாக எக்ஸ்ட்ரீம் 160R, அப்பாச்சி ஆர்டிஆர் 160R மற்றும் SP160 போன்ற மாடல்களும் உள்ளன.

புதிய பாடி கிராபிக்ஸ்

பல்சர் 150 பைக்கில் நீளம், கிரே மற்றும் சிவப்பு என மூன்று வண்ணங்களில் கிடைக்கின்ற மாடலில் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ், 150 என்ற எழுத்துக்கள் பெரியதாக பெட்ரோல் டேங்கில் வழங்கப்பட்டுள்ளதால், முந்தைய மாடலில் இருந்து வித்தியாசப்படுத்துகின்றது. மேலும் பல்வேறு இடங்களில் கார்பன் ஃபைபர் சார்ந்த கிராபிக்‌ஸூம் சேர்க்கப்பட்டுள்ளது.

மற்றபடி, அடிப்படையான டிசைன் பாகங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் ட்வீன் டிஸ்க் மற்றும் சிங்கிள் டிஸ்க் என இரண்டிலும் இந்த பாடி கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் உள்ளது.

2024 பஜாஜ் பல்சர் 150 பெட்ரோல் டேங்க்

2024 பல்சர் 150 என்ஜின்

என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து 149.5cc, ஏர் கூல்டு ஒற்றை சிலிண்டர் பெட்ரோல் DTS-I FI என்ஜின் அதிகபட்சமாக 14 PS பவரினை 8,500rpmலும் மற்றும் 13.25Nm டார்க்கினை 6,500rpmல் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பல்சர் 150 TD vs பல்சர் 150 SD

இரு பைக்குகளும் ஒரே மாதிரியான நிறங்கள் மற்றும் 15 லிட்டர் பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்களில் மாறுதல்கள் இல்லை என்றாலும் பிரேக்கிங் மற்றும் டயர் அளவுகள உட்பட சிலவற்றில் மாற்றங்கள் உள்ளது.

2024 பஜாஜ் பல்சர் 150 twin disc

Pulsar 150 Twin Disc வேரியண்டில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் முன்புறத்தில் 280 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் கொண்டிருப்பதுடன் முன்புறம் 90/90-17 மற்றும் பின்புறத்தில் 120/80-17 டயருடன் 37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொண்டுள்ளது. அளவுகளில் 2035 மிமீ நீளம், 1115 மிமீ உயரம், 750 மிமீ அகலம், மற்றும் 1345 மிமீ வீல்பேஸ் பெற்றுள்ள ட்வீன் டிஸ்க் பல்சர் 150 பைக்கின் எடை 150 கிலோ ஆகும்.

Pulsar 150 Single Disc வேரியண்டில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் முன்புறத்தில் 260 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் கொண்டிருப்பதுடன் முன்புறம் 80/100-17 மற்றும் பின்புறத்தில் 100 / 90 -17 டயருடன் 31 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொண்டுள்ளது. அளவுகளில் 2055 மிமீ நீளம், 1060 மிமீ உயரம், 765 மிமீ அகலம், மற்றும் 1320 மிமீ வீல்பேஸ் பெற்றுள்ள சிங்ங்கிள் டிஸ்க் பல்சர் 150 பைக்கின் எடை 148 கிலோ ஆகும்.

டிஜிட்டல் கிளஸ்ட்டர்

ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி கொண்டுள்ள பஜாஜின் ரைட் கனெக்ட் ஆப் பயன்பாட்டை பெறுகின்ற பல்சர்  150 பைக்கில்  ஸ்மார்ட்போனை இணைத்தால் அழைப்புகளை ஏற்பது அல்லது நிராகரிக்கும் வசதி, எஸ்எம்எஸ் அலர்ட்,  பேட்டரி மற்றும் மொபைல் சிக்னல் விபரத்தை கிளஸ்ட்டரில் கொண்டுள்ளது. இதுதவிர கியர் பொசிஷன் இன்டிகேட்டர், பெட்ரோல் இருப்பு, சராசரி மைலேஜ், மைலேஜ் எவ்வளவு கிடைக்கும் ஆகிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

2024 பஜாஜ் பல்சர் 150 single disc

2024 Bajaj Pulsar 150 on-road Price

2024 பஜாஜ் பல்சர்  150 பைக்கின் தமிழ்நாட்டின் அனைத்து முன்னணி நகரங்களின் ஆன்ரோடு விலை ரூ. 1.31 லட்சம் முதல் ரூ.1.42 லட்சம் வரை அமைந்துள்ளது.

Pulsar 150 எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
2023 Pulsar 150 SD ₹ 1,09,152 ₹ 1,31,063
2024 Pulsar 150 SD ₹ 1,13,092 ₹ 1,35,431
2024 Pulsar 150 TD ₹ 1,17,027 ₹ 1,41,932

(on-road price in Tamil Nadu)

2024 பஜாஜ் பல்சர் 150

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.