IND vs AFG: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி! இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்!

India vs Afghanistan: 2024 டி20 உலகக் கோப்பையின் லீக் ஆட்டங்கள் கிட்டத்தட்ட முடிந்துள்ளது. அடுத்ததாக சூப்பர் 8 சுற்று நடைபெற உள்ளது. இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தற்போது வரை தோல்வியை சந்திக்கவில்லை. லீக் போட்டிகளில் அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவை வீழ்த்தியது. கனடாவுக்கு எதிரான இந்தியாவின் கடைசி லீக் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் குரூப் A A பிரிவில் இந்தியா முதலிடத்தை பிடித்து சூப்பர் 8க்கு தகுதி பெற்றது. சூப்பர் 8 பிரிவு 1ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடம்பெற்றுள்ளது.

வரும் ஜூன் 20-ம் தேதி பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட உள்ளது. இதற்காக ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது. நியூயார்க் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால் பேட்டிங் செய்ய மிகவும் கடினமாக இருந்தது. தற்போது மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

A special interaction despite a washout in Florida 

Next Stop: Barbados #TeamIndia | #T20WorldCup pic.twitter.com/0KtT5nlR1l

— BCCI (@BCCI) June 17, 2024

குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம்

பார்படாஸில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக நிச்சயம் குல்தீப் யாதவ் இருப்பார். எனவே அணியில் அவர் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது. எனவே அர்ஷ்தீப் சிங் அல்லது சிராஜ்க்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம் பெறலாம். மேலும், விராட் கோலி 3வது இடத்தில் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. ரோஹித் சர்மாவுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓப்பனிங் செய்ய வாய்ப்புள்ளது. அக்சர் படேல் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் ஒருவருக்கு பதில் ஜெய்ஸ்வால் இடம்பெறலாம். ஜடேஜா சிறந்த ஃபார்மில் இல்லை என்றாலும் அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் இந்திய அணி வழக்கம் போல அக்சர் மேல் கைவைக்க வாய்ப்புள்ளது. 

ஸ்பின்னர்களை கையாள ஷிவம் துபே அணியில் நிச்சயம் தேவை. சிறந்த ஃபார்மில் இல்லை என்றாலும் மேற்கிந்திய தீவுகளில் அவர் கண்டிப்பாக விளையாடுவார். மேலும் ஆல்ரவுண்டர் என்பதால் பவுலிங்கும் போட முடியும். ரஷீத் கான், நூர் அகமது போன்ற ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக துபே சிறப்பாக விளையாடி உள்ளார். 

இந்தியாவின் உத்ததேச பிளேயிங் 11 vs ஆப்கானிஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.