நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உ.பி-யின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றிபெற்றார். அதையடுத்து, இரண்டு தொகுதிகளில் எந்தத் தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, எந்தத் தொகுதியில் எம்.பி-யாக ராகுல் தொடர்வார் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவிவந்தது. இதற்கிடையில் கடந்த வாரம் கேரளாவுக்கு வருகை தந்த ராகுல் காந்தி, வயநாடு மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போதே கேரள காங்கிரஸின் மூத்த தலைவர்கள், `ராகுல் காந்தி வயநாடு தொகுதியை விட்டுச் செல்வது வருத்தமான விஷயம்தான். ஆனால், வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தியும், காங்கிரஸாரும் எப்போது இருப்பார்கள்’ எனக் கூறினர்.
இந்த நிலையில், தீவிர ஆலோசனைக்குப் பின்னர், ராகுல் காந்தி வயநாடு எம்.பி பதவியைத் தற்போது ராஜினாமா செய்யவிருப்பதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார். மேலும், ராகுல் ராஜினாமா செய்யவிருப்பதால் காலியாகவிருக்கும் வயநாடு தொகுதியில், ராகுலின் தங்கையும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா போட்டியிடவிருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளும் எனக்கு மிகவும் நெருக்கமானவை. வயநாடு மக்களுக்காக நானும் என்னுடைய சகோதரி பிரியங்காவும் எப்போதும் குரல் கொடுப்போம். வயநாட்டுக்கு அடிக்கடிச் செல்வேன்.” எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், பிரியங்கா காந்தி இது குறித்து, “வயநாடு தொகுதியில் போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தத் தொகுதி மக்களுக்காகப் பாடுபடுவேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb