பாரத் மொபைலிட்டி ஷோவில் காட்சிக்கு வந்த சிஎன்ஜி மூலம் இயங்கும் டாடாவின் நெக்ஸானை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் கிடைக்கின்ற டைசோர், ஃபிரான்க்ஸ் மற்றும் மாருதி பிரெஸ்ஸாவுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் வகையில் சி.என்.ஜி மாடல் விளங்க உள்ளது.
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை பெறுகின்ற நெக்ஸான் சி.என்.ஜி பவர் மற்றும் டார்க் விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த என்ஜின் பெட்ரோல் பயன்முறையில் 118bhp பவரை வழங்குவதனால் சிஎன்ஜி முறைக்கு மாற்றப்படும் பொழுது மிக குறைவாகவே வெளிப்படுத்தக்கூடும். மேலும் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெறக்கூடும். கூடுதலாக சிஎன்ஜி மாடல்களில் ஏஎம்டி கியர்பாக்ஸை டாடா வழங்கி வரும் நிலையில், இந்த மாடலுக்கு பயன்படுத்தப்படுமா என உறுதியான எந்த தகவலும் இல்லை.
ட்வீன் சிலிண்டர் என்ஜின் ஆனது பின்புறத்தில் உள்ள பூட் பகுதியில் பொருத்தப்பட்டு பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் ஸ்டார்ட் செய்யும் வகையில் அமைந்து பூட் ஸ்பேஸ் இடவசதியும் வழங்கப்பட்டுள்ளது.
வரும் மாதங்களில் டாடாவின் நெக்சான் சிஎன்ஜி அறிமுகம் குறித்தான தகவல் வெளியாகலாம்.