புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
கடந்த வாரம் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தனக்கு அளிக்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததாக புகார் தெரிவித்திருந்தார். இது குறித்து மதுரஸ் பால் என்ற அந்தப் பயணி வெளியிட்ட எக்ஸ்பதிவில், “ஏர் இந்தியாவில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு போன்றவெட்டக்கூடிய உலோகத் துண்டுகிடந்தது.
வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் அத்திபழ சாட்டில் மறைந் திருந்த அந்த பிளேடை வாயில் போட்டு மென்ற பிறகுதான் தெரிய வந்தது அது உலோகத் துண்டு என்று. அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் இல்லை.
ஆனால், குழந்தை அந்தஉணவை சாப்பிட்டிருந்தால் பெரும் பிரச்சினை உருவாகி இருக்கலாம். நிச்சயமாக ஏர் இந்தியா கேட்டரிங் சேவையின் மீது குறைபாடு உள்ளது.
புகைப்படம் வெளியீடு: எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நான் துப்பிய உலோகத் துண்டு மற்றும் பரிமாறப்பட்ட உணவின் படங்களை இணைத்துள்ளேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஏர் இந்தியா விமானம் வழங்கிய உணவில் பிளேடு இருந்ததை அந்த நிறுவனம் நேற்று உறுதிப்படுத்தியது.
ஏர் இந்தியா ஒப்புதல்: இதுகுறித்து ஏர் இந்தியாவின் தலைமை வாடிக்கையாளர் அதிகாரி ராஜேஷ் டோக்ரா ஏஎன்ஐசெய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “ஏர் இந்தியா வாடிக்கையாளர் உணவில் இருந்த பிளேடு கேட்டரிங் பார்ட்னர் காய்கறி பதப்படுத்தும் இயந்திரத்தில் இருந்து வந்தது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நிகழாமல்தடுக்கும் வகையில், காய்கறிகளை பதப்படுத்துதல் மற்றும்வெட்டுதல் ஆகியவற்றை சரிபார்ப்பதற்கான அமைப்பை வலுப்படுத்துமாறு கேட்டரிங் பார்ட்னரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.