சென்னை: இந்தியாவில் ‘Gemini’ ஏஐ சாட்பாட் செயலியை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். இந்தியாவில் உள்ள மொபைல் போன் பயனர்கள் தமிழ் மொழி உட்பட 9 மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம்.
தற்போது இந்த செயலியை ஆண்ட்ராய்டு இயங்குதள போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் பிளே ஸ்டோர் மூலம் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதள பயனர்களுக்கு விரைவில் இந்த செயலி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்த கூகுள் அஸிஸ்டன்டுக்கு பதிலாக Gemini செயலியை Default-ஆக மாற்ற வேண்டி உள்ளது.
நீண்ட நெடிய கன்டென்ட்களை எளிதில் சம்மரைஸ் செய்து தரும் தன்மையை இந்த சாட்பாட் கொண்டு உள்ளது என கூகுளின் Gemini எக்ஸ்பீரியன்ஸஸ் பொறியாளர் பிரிவு துணைத் தலைவர் அமர் சுப்ரமணியா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த செயலியின் மூலம் பயனர்கள் தங்களுக்கு வேண்டிய அஸிஸ்டன்ஸை பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதில் பயனர்கள் பெறுகின்ற பதிலை டபுள் செக் செய்யும் அம்சமும் இருப்பதாக சொல்லியுள்ளார்.
டெக்ஸ்ட், போட்டோ மற்றும் வீடியோக்களை அடையாளம் காணும் அம்சத்தை கொண்டுள்ளது Gemini. ப்ராப்ளம் சால்விங் திறனில் இது அட்வான்ஸ்டு நிலையில் உள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. மனித வாழ்வை அறிவியல் சார்ந்த முன்னேற்றங்களுக்கு இது வழிவகுக்கும் என ஏஐ ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.