சக்திவாய்ந்த யமஹா NMAX டர்போ எடிசன்., இந்தியா வருமா..?

இந்தோனேசியாவில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா NMax மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டரில் கூடுதலாக டர்போ மற்றும் ஸ்போர்ட் டூரிங் என இரு ரைடிங் மோடுகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில்  ஏரோக்ஸ் 155 விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில் என்மேக்ஸ் 155 ஆனது பாரத் மொபைலிட்டி கண்காட்சியிலும் காட்சிக்கு வந்திருந்தாலும், இந்திய அறிமுகத்தை தற்பொழுது வரை யமஹா உறுதிப்படுத்தவில்லை.

புதிதாக யமஹா தனது ஸ்கூட்டரில் வெளியிட்டுள்ள டர்போ மோடு கூடுதல் பவரை வெளிப்படுத்தும் வகையில் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் அதிகரிகப்படுவதனால் கூடுதல் பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும்.

155cc DOHC ஒற்றை சிலிண்டர் லிக்யூடு கூல்டு VVA என்ஜின் ஆனது 14.8 bhp பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 14 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.  V- பெல்ட் பெற்ற CVT கியர்பாக்ஸ் பயன்படுத்துகிறது.

ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் கூடிய  TFT கிளஸ்ட்டர் மற்றும் எல்இடி ஹெட்லைட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெறுகின்ற யமஹா என்மேக்ஸ் 155 டர்போ இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவுதான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.