ஜூலை 5ல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ

குறைந்த செலவில் அதிக மைலேஜ் என்ற நோக்கத்தை கொண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள பஜாஜ் ஆட்டோவின் சிஎன்ஜி பைக் மாடலை ஜூலை 5, 2024ல் வெளியிட உள்ளதாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறிப்பாக பஜாஜ் ஆட்டோ தலைவர் தொடர்ந்து தனது செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து வந்த சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் தற்பொழுது உள்ள பெட்ரோல் மாடல்களை விட 50-60 % வரை எரிபொருள் செலவினை குறைக்கும் நோக்கில் தயாரிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

110-150 சிசி பிரிவில் பல்வேறு மாறுபட்ட ஸ்டைல் பெற்ற இந்த சிஎன்ஜி பைக்குகள் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயங்கும் வகையில் வரக்கூடும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வந்த பல்வேறு மாடல்கள் மாறுபட்ட ஸ்டைலிங் பெற்றிருந்த நிலையிலும், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ள பஜாஜின் சிஎன்ஜி மாடலில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்றிருப்பதனால் 125சிசிக்கு குறைந்த திறன் பெற்ற என்ஜினாக இருக்கலாம்.

மேலும் முழுமையான பல்வேறு தகவல்களை ஜூலை 5 ஆம் தேதி பஜாஜ் ஆட்டோ வெளியிட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.