மதுரை: 'உள்ளத்தை அள்ளித்தா' கவுண்டமணி ஸ்டைலில் சீட்டிங்! – அந்தியோதயா ரயிலில் சிக்கிய போலி டி.டி.இ

`உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படத்தில் போலி டிக்கெட் செக்கராக வந்து ரயில் பயணிகளை ஏமாற்றும் கவுண்டமணிபோல, நிஜத்தில் ஒருவர் ரயிலில் சீட்டிங் செய்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தியோதயா ரயில்

தெற்கு ரயில்வேயில் அந்தியோதயா அதிவிரைவு ரயில் தினசரி தாம்பரத்திலிருந்து நாகர்கோயில் வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலால் சாமனிய மக்கள் அதிகம் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த ரயில் வழக்கம் போல் நேற்று இரவு 11 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு இன்று காலை 6:10 மணியளவில் திருச்சியை வந்தடைந்தது. அப்போது டிக்கெட் பரிசோதகர் ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் ஏறி பயணிகளிடம் டிக்கெட்டுகளை சோதனை செய்திருக்கிறார்.

அதே ரயிலில் பணியில் இருந்த மதுரை ரயில்வே கோட்டத்தின் தலைமை பயணச்சீட்டு ஆய்வாளர் சரவண செல்விக்கு, டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட நபரைப் பார்த்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உடனே, “நீங்கள் எந்த ரயில்வே கோட்டத்தில் பணிபுரிகிறீர்கள்?” என சரவண செல்வி கேட்டதற்கு, “மதுரை கோட்டத்தில் பணிபுரிறேன்..” எனக் கூறியிருக்கிறார். “நானும் மதுரையில்தான் பணிபுரிகிறேன், உங்களை இதுவரை பார்த்ததில்லையே…” எனக் கூறிய சரவண செல்வி, அந்த நபரின் அடையாள அட்டையை வாங்கி சோதனை செய்ததில், அவர் வைத்திருந்தது போலி அடையாள அட்டை என்பது தெரியவரவே… உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

மணிகண்டன்

இதனையடுத்து மதுரை ரயில் நிலையத்தை ரயில் அடைந்தவுடன் ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் போலி டிக்கெட் பரிசோதகரை ஒப்படைத்தார்.

ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, கேரளா மாநிலம், பாலக்காடு அருகே தச்சாட்டுக்கரா பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் எதற்காக இப்படி செய்தார்? எத்தனை நாள்களாக இப்படி ஏமாற்றி வருகிறார் உள்ளிட்ட பல விவரங்களை விசாரித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.