மருத்துவ பட்டதாரிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்வதுடன் நாடு பூராகவும் அமைந்துள்ள அரசாங்கத்தின் பிரதான வைத்தியசாலைகளில் விஷேட மருத்துவர்கள், நன்கு அனுபவம் பெற்ற சிரேஷ்ட வைத்தியர்களின் பூரண கண்காணிப்புடன் ஒரு வருட காலம் பயிற்சியைப் பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
வரையறுக்கப்பட்ட பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்கள் பல் வைத்தியர்களாக மருத்துவ சங்கத்தில் பதிவு செய்து கொள்ள முடியும் என்பதுடன், இந்த பயிற்சியாளர்களுக்காக மாதாந்தம்
66,725/= ரூபா கொடுப்பனவு வரையறுக்கப்பட்ட பயிற்சிக் கொடுப்பனவாக சுகாதார அமைச்சின் ஊடாக வழங்கப்படும்.
இதன் போது கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் சுதந்திர சுகாதார சேவையை முறையாக, வினைத்திறனாக, தரமானதாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக அவசியமான சுகாதார பணியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது
கடந்த கொரோனா மற்றும் பொருளாதார சிக்கல் காலத்தில் சுகாதார சேவைக்கான ஆட்சேர்ப்பு பொதுவாக குறைந்த காணப்பட்டதுடன் தற்போது அந்த நிலை சாதாரண நிலைமைக்கு வந்துள்ளது.
நாட்டு மக்களுக்கு வினைத்திறனான தரமான சேவையை வழங்குவதற்கு அவசியமான பணியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதுடன் வைத்தியசாலைகளை மேற்பார்வை செய்து அவற்றின் ஆளணி மற்றும் பௌதீக வளங்களின் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றைக் காண தீர்வுகளை வழங்கும்விசேட வேலை திட்டத்தை தமது எண்ணப் படி சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது நாடு பூராகவும் அரச வைத்தியசாலைகளில் 86 விசேட பல் வைத்தியர்களும், 1337 பல் அறுவை சிகிச்சை வைத்தியர்களும் சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீபால, சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, பற்சிகிச்சை பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் திலக் சிறிவர்தன மற்றும் சுகாதார அமைச்சின் பற்சிகிச்சைப் பிரிவின் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.