கேஒய்சி அப்டேட் மோசடி… மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடை

இந்தியாவில் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. கோடை காலம் வந்தாலே மின்சாரம் துண்டிக்கப்படுமா என்ற அச்சம் இயல்பாக எழும். இதை மோசடி செய்பவர்களும் பயன்படுத்திக் கொள்கின்றனர். Electricity KYC Scam Update என்ற மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், நாடு முழுவதும் இது தொடர்பான மோசடியில் ஈடுபட்ட 392 மொபைல் போன்களை தொலைத்தொடர்பு துறை (DoT) தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதாவது, மின்சாரத்துறை கேஒய்சி அப்டேட் மோசடியில் இந்த மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்துறை KYC அப்டேட் மோசடி எவ்வாறு செயல்படுகிறது?

சில மோசடி பேர்வழிகள் மின்வாரிய அதிகாரிகள் போல் நடித்து மக்களுக்கு குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்புகின்றனர். இந்த போலிச் செய்திகள், மக்கள் தங்கள் KYC (Know Your Customer) தகவலைப் புதுப்பிக்கும்படி கேட்கின்றன, இல்லையெனில் மின்சாரம் துண்டிக்கப்படும் என எச்சரிக்கின்றன. இந்தச் செய்திகளில் பெரும்பாலும் Link -கள் இருக்கும், அவை கிளிக் செய்தால் அல்லது உங்கள் தனிப்பட்ட தகவலைக் கேட்கும். நீங்கள் அதனை நிரப்பும்பட்சத்தில் மோசடி செய்பவர்கள் இந்த தகவலைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள்.

சக்சு போர்ட்டல் உதவியுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை

இந்த மோசடி செய்பவர்களை பிடிப்பதில் அரசுக்கு ‘சக்ஷு’ செயலி மிகவும் உதவியாக உள்ளது. இது ஒரு அரசாங்க செயலி ஆகும், இதில் மக்கள் சந்தேகத்திற்குரிய எந்த தொலைபேசி அழைப்பு அல்லது செய்தியைப் பற்றி புகார் செய்யலாம். சமீபத்தில், ‘சக்ஷு’ செயலியில் மின்சார கேஒய்சி அப்டேட் மோசடி தொடர்பான பல புகார்களை மக்கள் பதிவு செய்தனர். இந்தப் புகார்களைக் கவனத்தில் கொண்டு, அரசாங்கம் ‘சக்ஷு’ செயலியிலேயே செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பைப் பயன்படுத்தியது. இந்த AI அமைப்பு இந்த மோசடியில் ஈடுபட்ட 392 மொபைல் போன்கள் மற்றும் 31,740 க்கும் மேற்பட்ட மொபைல் எண்களை ஆய்வு செய்து அடையாளம் கண்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இந்த மொபைல் எண்கள் மற்றும் தொலைபேசிகளை முடக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை (DoT) உத்தரவிட்டது.

மின்சார KYC அப்டேட் மோசடியைத் தவிர்ப்பது எப்படி?

– மின்சாரத் துறையிலிருந்து வந்ததாகக் கூறும் செய்தியில் உள்ள எந்த இணைப்பையும் கிளிக் செய்யவும் அல்லது எந்த இணைப்பைப் பதிவிறக்கவும் வேண்டாம்.
– வங்கி விவரங்கள், OTP அல்லது கணக்கு எண் போன்ற தனிப்பட்ட தகவல்களை செய்தியில் ஒருபோதும் கொடுக்க வேண்டாம்.
– சந்தேகம் இருந்தால், உங்கள் மின்சாரத் துறையின் இணையதளம் அல்லது தொலைபேசி எண்ணில் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.
– KYC புதுப்பிப்புகள் பற்றிய தகவலைப் பெற, உங்கள் மின்சாரத் துறையின் இணையதளம் அல்லது சமூக ஊடகப் பக்கங்களைப் பார்வையிடவும்.
– உங்கள் ஆன்லைன் மின் கட்டணக் கணக்கிற்கு வலுவான கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும் மற்றும் Two Factor Authentication இயக்கவும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.