பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் என்று நேற்று கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு எழுத்து மூலம் இலக்கப் பாட்டு வழங்குவதற்கு தயாராக உள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்தார்.
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பாக (18) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைக்கு பதிலளிக்கு முகமாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜெயந்த இவ்வாறு தெரிவித்தார்.
பல்கலைக்கழக கல்வி சாரா மற்றும் கல்விசார் பணியாளர்கள் சபைக்கு 2018ஆம் ஆண்டில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டதாகவும், அதன் போது கல்விகல்வி சார் சங்கத்தின் கலாநிதிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு நூற்றுக்கு 107வீரத்தால் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டதாக தெளிவுபடுத்திய அமைச்சர் அவை இரண்டிற்கும் இடையே நூற்றுக்கு 15 வீத விகிதத்தில் வேறுபாடு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
இந்த சம்பள பிரச்சினை 2018 ஆம் ஆண்டு முதல் ஆறு வருடங்களாக காணப்படுகிறது.ஆனால் அதனிடையே பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கொடுப்பனவு நூற்றுக்கு 25வீகத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு கொடுப்பனவை வழங்கினாலும் திறைசேரியின் அனுமதி அவசியம். ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை முடிவுறுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை முன் வைப்பதற்கு பொதுத் திறைசேரி யின் செயலாளர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் ஊடாக இந்த முரண்பாட்டை தீர்க்க முடியும். தற்போது ஒன்றரை மாத காலமாக அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. அஅதனைக் கூட பெற்று தருவதற்கு நாம் தயார் என்றும் கல்வி அமைத்து சுசில் பிரேம் ஜெயந்த சுட்டிக்காட்டினார்