6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக விற்பனை செய்யப்படுகின்ற அல்கசார் எஸ்யூவியின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலின் இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் முன்புற தோற்றம் கிரெட்டாவில் இருந்து மாறுபட்டதாக விளங்குகின்றது.
சமீபத்தில் எக்ஸ்டர் உட்பட சில மாடல்களில் H வடிவ எல்இடி ரன்னிங் விளக்குடன் மாறுபட்ட முன்பக்க கிரில் மற்றும் பம்பரில் சிறிய மாற்றங்களை பெற்றிருக்கலாம். புதிய அலாய் வீல் என பல்வேறு மாறுதல்களை பெற்றிருக்கலாம்.
இன்டிரியரில் கிரெட்டா எஸ்யூவி மாடலில் இருந்த பெறப்பட்ட 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் என ட்வீன் ஸ்கீரின் செட்டப் பெற்ற டேஸ்போர்டில் நிறங்கள் மாற்றப்பட்டு, அப்ஹோல்ஸ்ட்ரின் உள்ளிட்டவற்றில் சிறிய மாற்றங்களை கொண்டிருக்கலாம்.
குறிப்பாக ஹூண்டாய் தனது கார்களில் அடிப்படையாகவே 6 ஏர்பேக்குகள் கொடுக்க உள்ள நிலையில் கூடுதலாக ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெற உள்ளது.
மற்றபடி அல்கசார் என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லை. 160hp வழங்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 115hp வழங்கும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என இரண்டு என்ஜின் ஆப்ஷனில் வரவுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற உள்ளது.
வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஹூண்டாய் அல்கசார் விலை ரூ.17 லட்சத்துக்குள் துவங்கலாம்.
image -> instagram/autonation_india