வடகொரிய அதிபர் கிம் உடன் ஜாலி டிரைவ் சென்ற புதின்… – காரும் பரிசளிப்பு!

மாஸ்கோ: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது காரில் டிரைவ் அழைத்துச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வடகொரியா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது அதிகாரபூர்வ காரான அஃவ்ருஸ் லிமொஸின் காரில் கிம் ஜாங் உன் ட்ரிப் அழைத்துச் சென்றுள்ளார் புதின். மேலும், பல பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த காரை கிம் ஜாங் உன்னுக்கு கிஃப்டாக அளித்துள்ளார் புதின். இந்த கார் ஒரு ரஷ்ய தயாரிப்பு. சோவியத் காலத்தில் இருந்து புகழ்பெற்ற காராக இருக்கும் இதன் லேட்டஸ்ட் வெர்சன் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இருவரும் ஜாலியாக அக்காரில் ட்ரிப் அடித்த பின்னர் காரை ம் ஜாங் உன்னுக்கு கிஃப்டாக கொடுத்திருக்கிறார் புதின். காரில் ட்ரிப், பிறகு சிறிது நேரம் அரட்டை, பின்னர் சிறிது நேரம் வாக்கிங் சென்றனர். ரஷ்ய அரசு தொலைக்காட்சி இந்த வீடியோக்கள் வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் தான் இதே காரை கிம்முக்கு பரிசாக கொடுத்தார் புதின். பதிலுக்கு வடகொரிய இனமான புங்சான் நாய் இனத்தை புதினுக்கு பரிசாக கொடுத்தார் கிம்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் வட கொரியாவுக்கு ஆடம்பர பொருட்களை ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளன. எனினும், கிம் ரோல்ஸ் ராயல்ஸ், மெர்சிடஸ், லெக்ஸஸ் உள்ளிட்ட கார்களை வைத்துள்ளார். இப்போது அந்த வரிசையில் ரஷ்யாவின் மதிப்புமிக்க அஃவ்ருஸ் லிமொஸை காரையும் பெற்றுள்ளார்.

இதற்கிடையே, ரஷ்யா – வடகொரியா உறவுகளை மேம்படுத்தும் பொருட்டு ரஷ்ய அதிபர் புதின் வடகொரியா சென்றார். இந்தப் பயணத்தின் போது வட கொரியாவும், ரஷ்யாவும் தங்கள் ராணுவ உறவை அதிகப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.