இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 8வது தலைமுறை 5 சீரியஸ் லாங்க் வீல்பேஸ் (BMW 5 Series Long Wheel Base) மாடலுக்கான முன்பதிவு ஜூன் 24ஆம் தேதி அறிமுகத்திற்கு முன்னதாக இன்றைக்கே துவங்கப்பட்டுள்ளது.
பல்வேறு மேம்பாடுகளை மற்றும் ஸ்போட்டிவான தோற்ற அமைப்பு பெற்றிருக்கின்ற மாடலுக்கு ஆன்லைன் வழியாக மற்றும் டீலர்கள் மூலமும் மேற்கொள்ளப்படுகின்றது. சென்னையில் உள்ள ஆலையின் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படுவதனால் மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது
கடந்த ஆண்டு ஜி68 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்ட LWB காரின்அளவுகள் 5,175 மிமீ நீளம், 1,900 மிமீ அகலம் மற்றும் 1,520 மிமீ உயரம் கொண்டுள்ளது.
காரின் இன்டிரியரில் இரட்டை பிரிவு பெற்ற ஸ்டீயரிங் வீல், மிக அகலமான டிஜிட்டல் திரை கொண்ட டேஸ்போர்ட் பெற்றிருக்கும். 5ஜி ஆதரவினை வழங்குகின்ற 31.1 அங்குல, 8K டிஸ்பிளே பெற்ற திரையில் பல்வேறு நவீன வசதிகள் மற்றும் இணைய உலாவலையும் அனுமதிக்கின்றது.
இந்தியாவில், விற்பனைக்கு கிடைக்க உள்ள இந்த காரில் உள்ள இரு என்ஜின்களும் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் என இரு விதமாக வழங்கப்பட்டு 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றிருக்கலாம்.