கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் இருவரின் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 150 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் வயிற்றுப்போக்கு, கண் பார்வை குறைவு, காது கேளாமையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும் கள்ளச்சாராயத்தின் வீரியம் அதிகரித்துள்ளதால் பலர் உயிரிழந்து வருகிறார்கள்.
Source Link