ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘SAMIDARE’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படையின் ‘SAMIDARE (DD – 106)’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட (2024 ஜூன் 20) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘SAMIDARE (DD – 106)’ என்ற கப்பல் 150.5 மீற்றர் நீளமும், மொத்தம் 202 மாலுமிகளைக் கொண்டதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் KOGA Naoki பணியாற்றுகிறார்.
மேலும், ‘SAMIDARE (DD – 106)’ கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் KOGA Naoki மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேரா ஆகியோருக்கு இடையில் இன்று (2024 ஜூன் 20,) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நடைபெற்றது. குறித்த கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் போது, அதன் முழுவினர் இலங்கையில் முக்கிய இடங்களைப் பார்வையிடவும் பல பகுதிகளுக்குச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், SAMIDARE (DD-106) கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு 2024 ஜூன் 22 அன்று தீவை விட்டு வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளது, அங்கு அது இலங்கை கடற்படைக் கப்பலுடன் கடற்படை பயிற்சியில் (PASSEX) ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது.