பொசன் பூரணை தினத்தினை முன்னிட்டு அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 7 ஆண் கைதிகள் நேற்று (21) பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இக்கைதிகள் இன்று காலை 10.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையின் பதில் பிரதம ஜெயிலர் ஜே.சி.ஹென்றி உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டனர்.
சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்றுவந்த கைதிகளே இவ்வாறு பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.