புகாட்டியின் சிரோன் வெற்றியை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள புதிய டூர்பில்லியன் ஹைப்பர்-ஜிடி (Bugatti Tourbillon) காரின் மொத்த உற்பத்தி எண்ணிக்கை 250 ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக 1800hp பவர் வெளிப்படுத்தும் 8.3 லிட்டர் V16 ஹைபிரிட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
உலகின் அதிவேகமான கார்
உலகின் மிக அதிக வேகமான கார் என்ற பெருமையை பெற்றுள்ள SSC Tuatara பெற்று மணிக்கு 532.69 Km/hrஆக உள்ள நிலையில், தற்பொழுது வந்துள்ள டூர்பில்லியன் ஹைப்பர்-ஜிடி பற்றி புகாட்டியின் தலைவர் குறிப்பிடுகையில் ஆரம்பநிலை அதிகபட்ச வேகம் மட்டுமே 445 கிமீ ஆகும் ஆனால் உண்மையான அதிகபட்ச வேகம் டிராக் மாடல்கள் எட்டி மீண்டும் உலகின் அதிகவேகமான கார் என்ற பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
அறிமுகம் செய்யப்பட்ட பொழுது சிரோன் அதிகபட்ச வேகம் மணிக்கு 420 கிமீ ஆக இருந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மாடல் மணிக்கு 480 கிமீ எட்டியதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, டூர்பில்லியன் அதிகவேகமான மற்றும் அதி விரைவான கார் என்ற பட்டத்தை பெற வாயுப்புள்ளது.
Tourbillon hyper-GT Engine
முந்தைய சிரோன் காரில் இடம்பெற்றிருந்த W16 குவாட் மோட்டார் என்ஜின் நீக்கப்பட்டு புதிய 8.3 லிட்டர் V16 PHEV என்ஜின் மூன்று எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தி அதிகபட்சமாக 1800 HP பவர் வெளிப்படுத்துவதுடன், உலகில் உள்ள கார்களில் மிக விரைவாக 0-100 கிமீ வேகத்தை எட்டிவதற்கு 2.0 நொடிகளும், 0-200 கிமீ வேகத்தை எட்டு 5.0 நொடிகளுக்கு குறைவான நேரத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிளக் இன் ஹைபிரிட் காரில் உள்ள 25kWh பேட்டரி கொண்டு மட்டும் பயணித்தால் முழுமையான சார்ஜில் 60 கிமீ பயணிக்கும் திறனை பெற்றிருக்கின்றது. 800V ஆர்க்கிடெச்சர் அமைப்பினை பெறுகின்ற இந்த மாடல் 0-80 % சார்ஜிங் பெற 12 நிமிடங்கள் போதுமானதாகும்.
புகாட்டி டூர்பில்லியன் டிசைன்
முந்தைய வெய்ரோன் மற்றும் சிரோன் சூப்பர் கார்களின் அடிப்படையிலான டிசைனை பின்னணியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள டூர்பில்லியன் காரில் தனது குதிரை லாடம் போன்ற பாரம்பரிய கிரில் அமைப்பினை பெற்று புகாட்டியின் லோகோ மத்தியில் உள்ளது.
1995 கிலோ எடை கொண்டுள்ள புதுப்பிக்கப்பட்ட டிசைனை பெறுகின்ற டூர்பில்லியன் ஹைப்பர் ஜிடியின் அதிகபட்ச வேகம் மணிக்கு 400 கிமீ பயணிக்கும் திறனை இலகுவாக எட்டுவதற்கு ஏற்ற (aerodynamics) காற்றியக்கவியல் மட்டுமல்லாமல், காரின் வெப்ப இயக்கவியலுக்கும் (thermodynamics) ஆகியவற்றை உறுதிப்படுத்த, வாகனத்தின் பாடி மற்றும் காக்பிட் சிறப்பான வகையில் குளுமையை நன்றாக வழங்கும்,” என புகாட்டி தெரிவித்துள்ளது.
இன்டிரியரில் தனது பாரம்பரிய வடிவங்களை பெற்றிருந்தாலும் நவீன தலைமுறைக்கு ஏற்ற எலக்ட்ரானிக் சார்ந்த அம்சங்கள், டிஜிட்டல் சார்ந்த கிளஸ்ட்டர் சார்ந்த ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கின்றது.
ரிமாக் (Rimac) கீழ் செயல்படுகின்ற புகாட்டி தனது கார்களில் முதன்முறையாக மிகவும் விலை உயர்ந்த மாடலாக டூர் பில்லியன் சூப்பர் ஹைப்பர் காரின் விலை GBP 3.2 மில்லியன் (தோராயமாக இந்திய மதிப்பில் 34 கோடி வரிகள் இல்லாமல்) ஆகும்.
Bugatti Tourbillion V16 Hybrid Image Gallery