கடந்த பிப்ரவரி முதல் கிடைக்கின்ற ஃபிரான்க்ஸ் விளோசிட்டி எடிசன் (Maruti Fronx Velocity Edition) எனப்படுகின்ற கூடுதல் ஆக்செரீஸ் இணைக்கப்பட்ட பதிப்பு இப்பொழுது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என மொத்தமாக உள்ள 14 வேரியண்டுகளிலும் கிடைக்க துவங்கியுள்ளது. குறிப்பாக, சிக்மா ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ.7.51 லட்சத்திற்கு பதிலாக ரூ.22,000 குறைவாக ரூ.7.29 லட்சத்தில் துவங்குகின்றது.
சமீபத்தில் 1,00,000 விற்பனை எண்ணிக்கையை மிக குறைந்த காலத்தில் எட்டிய ஃபிரான்க்ஸ் கிராஸ்ஓவர் மாடல் 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் உள்ள போட்டியாளர்களை எதிர்கொள்ளுகின்ற நிலையில், சமீபத்தில் இதன் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலை டொயோட்டா டைசோர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 hp குதிரைத்திறன் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடல் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டையும் பெறுகின்றது. இதே என்ஜினில் கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனும் உள்ளது.
1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் (மைல்டு ஹைபிரிட்) 100 PS பவர் மற்றும் 148 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற காரில் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.
டெல்டா, டெல்டா+ மற்றும் டெல்டா+(O) போன்ற டாப் வேரியண்டுகளில் சைட் பாடி மற்றும் ரியர் பம்பர் டிரிம் சிவப்பு நிறத்தில், ஒளிரும் கதவு சில்ஸ், ரியர் ஸ்பாய்லர் நீட்டிப்பு, டோர் வைசர், ரெட் விங் மிரர் கவர்கள் மற்றும் ரெட் டேஷ் டிசைனர் மேட்கள் என பலவற்றை பெறும் நிலையில் வேரியண்ட் வாரியாக உள்ள ஆக்செரீஸ் கீழ் உள்ள படத்தில் உள்ளது.