YSRCP கட்டடத்தை இடித்த ஆந்திரா அரசு – `சட்ட விரோத கட்டடம்’ என விளக்கம்!

ஆந்திர மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசக் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து, கடந்த 12-ம் தேதி சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் ருஷிகொண்டா மலையில் ஜெகன்மோகன் ரெட்டி மக்கள் வரிப்பணத்தில் ரூ.500 கோடி மதிப்பில் ரகசியமாக அரண்மனை கட்டியிருப்பதாக குற்றம் சாட்டியது தெலுங்கு தேசக் கட்சி. அது தொடர்பாக பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது.

சந்திரபாபு நாயுடு

இதற்கிடையில், ஹைதராபாத்தில் உள்ள லோடஸ் பாண்ட் பகுதியில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான இல்லத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கும் அறை, சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாக குறிப்பிட்டு, ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் அதை இடித்து நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், தற்போது ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தின் தடேபள்ளியில் கட்டப்பட்டு வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகம், சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறி இன்று காலை 5:30 மணியளவில் மங்களகிரி – தாடேபள்ளி மாநகராட்சியின் (எம்டிஎம்சி) அதிகாரிகள் புல்டோசர்களைப் பயன்படுத்தி இடித்திருக்கின்றனர். இந்த நடவடிக்கை தொடர்பாக ஒய்.எஸ்.ஆர்.சி கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, “முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி

உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் புறக்கணித்து, ஒரு சர்வாதிகாரி போல, ஒய்.எஸ்.ஆர்.சி.பி-யின் மத்திய அலுவலகத்தை புல்டோசர்களைக் கொண்டு இடித்திருக்கிறார். இந்தச் செயல்கள் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தனது ஆட்சி எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து நாயுடு ஒரு செய்தியைத் தருகிறார். எவ்வாறாயினும், இந்த அச்சுறுத்தல்கள் மற்றும் அரசியல் பழிவாங்கல்களுக்கு முன் கட்சி எப்போதும் தலைவணங்காது. சந்திரபாபு நாயுடுவின் இந்த செயல்களை கண்டிக்கிறேன்… மக்கள் சார்பாக போராடுவேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.