கொல்கத்தா: அரசுக்கு சொந்தமான நிலம் அபகரிக்கப்படுவதைத் தடுக்க மேற்கு வங்க மாநில அரசு மூத்த அரசு அதிகாரிகள் அடங்கிய செயற்குழு ஒன்றை அமைத்துள்ளது.
இது தொடர்பாக அரசு வட்டாரங்கள் வட்டம் கூறியதாவது: அரசாங்கத்துக்கு சொந்தமான நிலங்களை சட்ட விரோதமாக அபகரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுத்து நிறுத்த செயற்குழு ஒன்றை முதல்வர் மம்தா பானர்ஜி நிறுவ முடிவெடுத்துக் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
மேற்கு வங்க அரசின் நிதித்துறை செயலாளர் மனோஜ் பந்த், மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரபாத் மிஸ்ரா, கூடுதல் டிஜிபி (சட்ட ஒழுங்கு) மனோஜ் வர்மா, கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் கோயல் ஆகியோர் அடங்கிய செயற்குழு இதனை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் மன உளைச்சலுடன் காணப்பட்டார். நில அபகரிப்புகளை தடுக்க மேற்கு வங்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.