Aliens: `ஏலியன் பூமியில் மனுஷங்களைப் போல மறைஞ்சு வாழலாம்'… ஆய்வு சொல்லும் ஆச்சர்ய தகவல்!

பிரபஞ்சம் என்ற பெருவெளியில் பூமி ஒரு புள்ளி. பூமியில் மனிதர்கள் வாழ்வது போல வேற்று கிரகத்தில் ஏலியன்கள் வாழலாம் என்று கூறப்படுகிறது.

அதோடு மனிதர்களில் சிலர் விண்கலங்களைப் பார்த்ததாகவும், விநோதமான உயிரினங்களை கண்டதாகவும் கூறுவதுண்டு. ஏலியன்கள், ஸ்பேஸ்ஷிப், டைம்டிராவல் குறித்த சுவாரஸ்யமான படங்களும் ஹாலிவுட்டில் அவ்வப்போது வெளியாவதுண்டு.

ஏலியன்கள் உண்மையில் இருக்கின்றனவா, இல்லையா என்பது குறித்த தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோதும் உறுதியான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. 

ஆனால், சமீபத்தில் ஹார்வர்டு பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் ஏலியன்கள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில் `வேற்றுகிரக வாசிகள் பூமியில் மனிதர்களோடு மனிதர்களாக ரகசியமாக வாழலாம்’ என்று தெரிவித்துள்ளனர்.  

இப்படி மனிதர்கள் போல வாழக்கூடிய உயிரினங்களை `கிரிப்டோ டெரெஸ்ட்ரியல்கள்’ (crypto terrestrials) என்கின்றனர். அதோடு பூமியில் வாழக்கூடிய இந்த ஏலியன்களை காணவே விண்கலங்கள் வந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

அப்படியென்றால் இந்த ஏலியன்கள் எப்படி பூமிக்கு வந்திருக்கும் என்ற கேள்வி எழலாம். இவர்கள் நான்கு விதங்களில் பூமிக்கு வந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

1.தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட பண்டைய மனித நாகரிகம் பல காலத்திற்கு முன்பே அழிந்துவிட்டது. ஆனால், சிலர் இதிலிருந்து தப்பி பிழைத்து தொடர்ந்து உயிர் வாழ்ந்திருக்கலாம்.

2.பரிணாம வளர்ச்சி என்பது அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு. அந்தவகையில் மனிதன் அல்லாத சில உயிரினங்கள் பரிணாமம் அடைந்து நிலத்தடியில் மறைந்து வாழலாம். இந்த உயிரினங்கள் குரங்கு போன்ற மனித இனத்தின் வழித்தோன்றலாகவோ அல்லது மிகவும் புத்திசாலித்தனமான டைனோசர்களின் வழித்தோன்றலாகவோ இருக்கலாம். 

Alien

3. இந்த உயிரினங்கள் பிரபஞ்சத்திலிருந்து பூமிக்கு  வந்திருக்கலாம் அல்லது மனிதனுடைய எதிர்காலத்தில் இருந்து (Human Future) பூமிக்கு வந்து தற்போது சந்திரனில் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

4. இந்த உயிரினங்கள் ஏலியன்களாக அல்லாமல், தேவதைகள், குட்டிசாத்தான்கள், கடல் கன்னிகள் போன்ற வடிவங்களில் மனிதர்களை தொடர்பு கொள்ளலாம். பொதுவாக ஏலியன்கள் நவீன தொழில்நுட்ப அறிவு கொண்டவையாக பார்க்கப்படும். ஆனால், ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்ட இந்த உயிரினங்கள் குறைந்த தொழில்நுட்ப அறிவு  கொண்டவையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.