Xiaomi 14 Civi vs Moto Edge 50 Ultra… ஒற்றுமையும் வேற்றுமையும் – எதை வாங்கலாம்?

Smartphone Tech Tips: ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள் எப்போதும் அதன் பட்ஜெட்டை திட்டமிட்டுதான் வாங்குவார்கள். அதாவது அது குறைந்த பட்ஜெட்டாகவும் இருக்கலாம், ஐபோன் போன்று பெரிய பட்ஜெட்டாகவும் இருக்கலாம். தங்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் எந்தெந்த மொபைல்களில் சிறப்பமான அம்சங்களுடன் கிடைக்கிறதோ அதை வாங்கவே வாடிக்கையாளர்கள் திட்டமிடுவார்கள். 

அப்படியிருக்க வாடிக்கையாளர்கள் ஒரே விலை வகைமையில், ஏறத்தாழ ஒரே அம்சங்களை கொண்ட மொபைல்களை ஒப்பிட்டு பார்த்தே தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்வார்கள். அந்த வகையில், மிட் ரேஞ்ச் பட்ஜெட்டில் அதாவது ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலான பட்ஜெட்டில் கிடைக்கும் இரண்டு புதிய மொபைல்களின் ஒப்பீட்டை இங்கு காணலாம். 

Xiaomi 14 Civiமற்றும் Moto Edge 50 Ultra ஆகிய இரண்டு மொபைல்களின் ஒப்பீட்டை இதில் விரிவாக தெரிந்துகொள்ளுங்கள். மேலும் இந்த இரண்டு மொபைல்களில் எது சிறந்தது அல்லது எது உங்களுக்கு தேவையானது என்பதை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம். இதில் Xiaomi 14 Civi கேமரா சார்ந்த மொபைல் என்றால் Moto Edge 50 Ultra கேமரா மட்டுமின்றி பிரீமியம் 
டிசைனுடன் வருகிறது.

ஒற்றுமையும், வேற்றுமையும்…

இந்த இரண்டு மொபைல்களும் Snapdragon 8s Gen 3 பிராஸஸருடன் வருகிறது. இரண்டு மொபைல்களும் 12ஜிபி RAM உடன் வருகிறது, Xiaomi 14 Civi மட்டும் 8ஜிபி RAM உடன் வருகிறது. இன்டர்நெல் ஸ்டோரேஜில் Xiaomi 14 Civi 256ஜிபி, 512ஜிபி உடனும், Moto Edge 50 Utra 512ஜிபி உடன் மட்டுமே வருகிறது. 

Xiaomi 14 Civi மற்றும் Motorola Edge 50 Ultra ஆகிய இரண்டு மொபைல்களும் மூன்று கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் Xiaomi 14 Civi கேமராவில் கூடுதல் அம்சத்தையும் கொடுக்கிறது. Xiaomi 14 Civi 4,700 mAh பேட்டரியுடன், 68W பாஸ்ட் சார்ஜிங் உடனும், Motorola Edge 50 Ultra 4,500 mAh உடன் வருகிறது. மேலும், 125W சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், 10W வயர்லெஸ் பவர் ஷேரிங் உடன் வருகிறது. 

விலை எவ்வளவு?

Xiaomi 14 Civi இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. 8ஜிபி + 256ஜிபி 42 ஆயிரத்து 999 ரூபாய்க்கும்; 12ஜிபி + 512 ஜிபி 47 ஆயிரத்து 999 ரூபாய்க்கும் கிடைக்கிறது. Moto Edge 50 Ultra ஒரே ஒரு வேரியண்டில் வருகிறது. 12ஜிபி + 512ஜிபி 54 ஆயிரத்து 999 ரூபாய்க்கும் வருகிறது.

இதில் Motorola Edge 50 Ultra மொபைல் சிறப்பான டிசைனில் வருகிறது. முன்பே சொன்னதுபோல், கேமரா அம்சம் Xiaomi 14 Civi மொபைலில் சிறப்பாக இருக்கிறது. Motorola Edge 50 Ultra கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. Xiaomi 14 Civi கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.