ஏர்டெல் : நாள் ஒன்றுக்கு 5 ரூபாய் செலவழித்தால் 365 நாட்களும் டேட்டா, வாய்ஸ்கால் இலவசம்.!

ஏர்டெல் நிறுவனம் தனக்கு போட்டியாக இருக்கும் ஜியோ, வோடாஃபோன் ஐடியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்களை சமாளிக்க புதுப்புத்து திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், பழைய வாடிக்கையாளர்களை இழக்காமல் இருக்கவுமே இந்த திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. அந்தவகையில், டேட்டா குறைவாக பயன்படுத்துவர்களை டார்கெட் செய்து ஒரு பிளானை ஏர்டெல் கொண்டு வந்திருக்கிறது. மலிவு விலை பிளானான இதனை ரீச்சார்ஜ் செய்தால் 365 நாட்களும் தங்கு தடையின்றி பேசி மகிழலாம். டேட்டா வேண்டாம் என்பவர்கள், டேட்டா பயன்படுத்த தெரியாத ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

அதேநேரத்தில் குறைவாக டேட்டா பயன்படுத்துவர்களுக்கும் ஏர்டெல் நிறுவனத்தின் இந்த பிளான் உகந்தது. தேவைப்படுபவர்கள் குறைந்த விலையில் இருக்கும் டேட்டா பூஸ்டர்களை ரீச்சார்ஜ் செய்து டேட்டா பயன்படுத்திக்கொள்ளலாம். மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இந்த பிளான் சிறந்தது என்றே சொல்லலாம். மேலும், இரண்டாவது சிம் கார்டாக பயன்படுத்துபவர்களும் இந்த பிளானை ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ.1799 ரீசார்ஜ் திட்டம்

தற்போது, ஏர்டெல்லின் மலிவான ரீசார்ஜ் திட்டம் ரூ.1,799 க்கு வருகிறது, இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் வசதியை ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது. ஒரு வருடத்திற்கு 24 ஜிபி இணைய டேட்டாவை வழங்குகிறது. ஆனால், நீங்கள் டேட்டா பூஸ்டர் ரீச்சார்ஜ் செய்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் மட்டும் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். கூட்டி கழித்து பார்த்தால் இந்த திட்டத்துக்கு வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு 5 ரூபாய் மட்டுமே செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றான இந்த திட்டத்தின் மூலம், பயனர்கள் நாடு முழுவதும் இலவச தேசிய ரோமிங் மற்றும் வரம்பற்ற அழைப்பைப் பெறலாம். கூடுதலாக, இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் இலவச ஹலோ ட்யூன்ஸ், Wynk மியூசிக் சந்தா மற்றும் பல போன்ற சேவைகளும் அடங்கும்.

வோடாஃபோன் ஐடியா

இதே விலையில் வோடாஃபோன் ஐடியா நிறுவனமும் ரீச்சார்ஜ் திட்டங்களை வைத்திருக்கிறது. ஆண்டுக்கு 24 ஜிபி டேட்டா சலுகையை கொடுக்கும் விஐ, அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையை தருகிறது. இதனுடன் கூடுதல் சலுகையாக விஐ மூவிஸ் மற்றும் டிவி ஆப் சந்தா ஆகியவற்றையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.