Sedan கார் வாங்க திட்டமா… கடந்த மே மாதத்தில் மக்கள் எதை அதிகமாக வாங்கினார்கள் தெரியுமா?

Sedan Car Sales In May 2024: கார்களை வாங்கும் முன் பலரும் பட்ஜெட்டை பார்ப்பது போன்று அதன் அம்சங்களையும், அதில் எத்தனை பேர் அமர முடியும் ஆகிய வசதிகளையும் பார்க்க வேண்டும்.  Hatchback கார்கள் என்றால் பின்னால் டிக்கி இல்லாதவை, உதாரணத்திற்கு Maruti Swift ரக கார்களாகும். Sedan கார்கள் என்றால் மாடலில் டிக்கி உடன் வரும், உதாரணத்திற்கு Maruti Swift Dzire போன்றது. ஆனால் இவற்றை விட SUV கார்கள் பிரபலமாகும். அதாவது, இவை டிக்கி உடன் வரும், Sedan கார்களை பெரிய சைஸில் வரும், உதாரணத்திற்கு Maruti Vitara Breeza.

சமீப காலங்களாக Hatchback மற்றும் Sedan வகை கார்கள் விற்பனையில் வீழ்ச்சி கண்டு வருகின்றன. SUV கார்கள் விற்பனையில் சற்று வளர்ச்சி கண்டு வருகின்றன. இருப்பினும், Sedan கார்கள்தான் மிகவும் குறைவாக விற்பனையாகின்றன. அதேதான் கடந்த மே மாதமும் நடந்துள்ளது. இந்திய கார் சந்தையில் கடந்த மாதத்தில் Sedan கார்கள் -0.93% வீழ்ச்சியும், Hatchback கார்கள் 14.65% வீழ்ச்சியும் கண்டுள்ளன. 

Sedan கார்கள் விற்பனை நிலவரம்

அந்த வகையில், கடந்த மே மாதத்தில் Sedan வகை கார்களின் விற்பனை நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது. Sedan கார்களில் வெவ்வேறு நிறுவனங்களின் 11 மாடல்கள் சேர்ந்து 31,246 யூனிட்கள் இந்த மே மாதத்தில் விற்பனையாகி உள்ளன. இதிலும் Maruti நிறுவனமே விற்பனையாகி உள்ளது.

முதலிடத்தில் Maruti Dzire

Sedan கார் விற்பனையில் Maruti Dzire கார் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த மே மாதத்தில் மட்டும் மொத்தம் 16 ஆயிரத்து 61 யூனிட்கள் இதில் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு மே மாதத்தில் 11 ஆயிரத்து 315 யூனிட்களே விற்பனையான நிலையில், இந்தாண்டு 4,746 யூனிட்கள் அதிகரித்து வருடாந்திர விற்பனை 41.94% அதிகரித்துள்ளது. மேலும் Sedan கார்களின் மொத்த விற்பனையில் 51.40% பங்களிப்பு Maruti Dzire உடையதாகும். 

வருடாந்திர விற்பனையில் வீழ்ச்சி

Maruti Dzire காரை தவிர மற்ற 10 மாடல்கள் சேர்ந்துதான் மீதம் உள்ள 48.20% பங்களிப்பை அளித்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வருடாந்திர விற்பனையில் Dzire தவிர மற்ற 10 மாடல்களும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதன் விற்பனை பட்டியலை இங்கு காணலாம். Hyundai Aura விற்பனையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது இந்த மே மாதத்தில் 4,433 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இது வருடாந்திர விற்பனையில் 5.82% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது, மாதாந்திர விற்பனையில் 2.05% ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. 

மாதாந்திர விற்பனையில் வளர்ச்சி

தொடர்ந்து, Honda Amaze விற்பனையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த மே மாதத்தில் 2,215 யூனிட்கள் விற்றுள்ளன. இதுவும் வருடாந்திர விற்பனையில் 29.19% ஆகவும் வீழ்ச்சி கண்டிருந்தாலும், மாதாந்திர விற்பனையில் 23.33% ஆகவும் வளர்ச்சிகண்டுள்ளன. அதுமட்டுமின்றி, Tata Tigor/EV மே மாதத்தில் 2 ஆயிரத்து 98 யூனிட்களை விற்று நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இருப்பினும் வருடாந்திர விற்பனையில் 22.33% ஆகவும், மாதாந்திர விற்பனையில் 2.55% ஆகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. 

விற்பனையில் ஐந்தாவது இடத்தை Volkswagon Virtus பிடித்துள்ளது. இதன் விற்பனை மே மாதத்தில் 1,610 யூனிட்கள் மட்டுமே. வருடாந்திர விற்பனையில் 1,29% ஆக வீழ்ச்சி அடைந்துள்ள இந்த கார், மாதாந்திர விற்பனையில் 36.09% வளர்ச்சி கண்டுள்ளது. தொடர்ந்து, Skoda Slavia, Hyundai Verna, Honda City, Maruti Ciaz, Toyota Camry, Skoda Superb ஆகியவை 6ஆவது முதல் 11ஆவது இடத்தை முறையே விற்பனையில் பிடித்துள்ளன. மேலும், Sedan கார்கள் மாதாந்திர விற்பனையில் கடந்த ஏப்ரல் மாதத்தை விட இந்த மாதம் 3.50% வளர்ச்சி கண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.