ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு (26) நாளை உரை நிகழ்த்தவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் தொலைக்களத்தில் இன்று (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின் போது இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் நாட்டின் பொறுப்புள்ள தலைவராக சர்வதேச நிதி தொடர்பாக விளையாட முடியாது. இது அனைவரதும் நாடு. இந்த நாடு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கடன் மறுசீரமைப்புத் திட்டம் இல்லாவிட்டால் யார் என்ன விதமாக நினைத்துக் கொண்டிருந்தாலும் இரண்டு வாரங்களுக்காவது நாட்டை ஆட்சி செய்ய அரசாங்கத்தை நடாத்த முடியாது.
உலகின் நம்பகத்தன்மை மிக்க சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வாங்கி, என்பவற்றுடன் இணைந்து நிதி முறைமை மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பொய் கூற யாராலும் முடியாது.
அப்படியான நாடுகள் தொடர்ந்தும் செயற்படுவதில்லை. அவ்வாறான நாடுகளுக்கு தமது பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் பெறவோ அல்லது தமது நாட்டில் இல்லாதவற்றை வேறு நாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளவோ முடியாது போகும்போது சர்வதேச ரீதியாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள இயலாது..
அதனால் பொறுப்புள்ள அரசாங்கமாக நாட்டின் தலைவராக நாட்டில் ஒரு இக்கட்டான நிலை ஏற்படும் போது தீர்மானம் மிக்க கருத்துக்கள், நாட்டிற்காக ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தப்படும்.
மேலும் அரசியலமைப்பின் பிரகாரம் நிதி தொடர்பான சகல அதிகாரங்களையும் பாராளுமன்றத்திற்கு ஒப்படைப்பதனால் அதனை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியினால் தெளிவுபடுத்துவதற்காகவே இந்த உரை நிகழ்த்தப்படவுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்தினார்.