தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு விழுப்புரம், செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விடவும் இரண்டு மடங்குக்கும் அதிகமாக கள்ளச்சாராய உயிரிழப்புகள் கள்ளக்குறிச்சியில் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதுவரையில் 60 பேர் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்திருக்கின்றனர். 100-க்கும் மேற்பட்டோர் இன்னும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள்மீது மட்டும் சஸ்பெண்ட், பணியிடமாற்றம் என நடவடிக்கை எடுத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனிநபர் ஆணையம் ஒன்றை அமைத்திருப்பதோடு, சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.
இருப்பினும், கடந்த ஆண்டே கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்தும், இந்த ஆண்டு அதைவிட அதிக கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்டிருப்பதும், மரணம் ஏற்பட்ட பிறகு போலீஸார் பல ஆயிரம் லிட்டர் கணக்கில் கள்ளச்சாராயத்தைக் கைப்பற்றி பலரைக் கைதுசெய்வதும், ஆளும் தி.மு.க அரசு வேண்டுமென்றே மக்கள் உயிர்களைக் கண்டுகொள்ளாமலிருந்ததா என்ற கேள்வியை மக்களிடையே உதிக்க வைத்திருக்கிறது.
இதன்காரணமாக, கள்ளச்சாராயத்தை தமிழ்நாட்டில் கட்டுப்படுத்த முடியாததற்கான காரணம் குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு காரணம் என்ன?’ என்ற கேள்வி கொடுக்கப்பட்டு, `அரசு நிர்வாகத் தோல்வி, போலீஸ் உடந்தையாக இருந்தது, அரசியல்வாதிகளின் தலையீடு’ ஆகிய மூன்று விருப்பங்களும் தரப்பட்டிருந்தது
இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அதிகபட்சமாக 43 சதவிகிதம் பேர் `அரசு நிர்வாகத் தோல்வி’ என்று காரணம் தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 36 சதவிகிதம் பேர் `போலீஸ் உடந்தையாக இருந்தது’ என்றும், 21 சதவிகிதம் பேர் `அரசியல்வாதிகளின் தலையீடு’ என்றும் காரணம் தெரிவித்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88